சித்திரம் 10

302 23 4
                                    

தொடர்கதையாய் பின்தொடரும்

எண்ணற்ற குழப்பங்கள்..

அதன் வெளிப்பாடாய் முன்நிற்கும்

அளவில்லா கோபங்கள்..

நிலையின்றி பரிதவிக்கும்

வேங்கையவள் எண்ணங்கள்..

விடுகதையின் விடையறியும்

நாளிற்காய் காத்திருக்கும்..!

உள்ளங்கையில் குளம் கட்டி தேங்கி நிற்கும் நீர் துளிகள் "டிங்" என்ற சத்தத்துடன் பாய்ந்து உயிரை மாயித்துக்கொண்டது. இதன்யா முகத்தை கழுவும் வேலையை ஒத்தி வைத்து விட்டு புருவம் முடிச்சிட யோசனையில் இருந்தாள். அவளது இடது புருவம் மேலே ஏறி இறங்க இந்த வாரம் முழுவதும் நடந்த நிகழ்வுகளை அசை போட்டவளுக்குச் சலிப்புத்தட்ட அதனுடனே எழுந்த சிறு கோபமும் சேர்த்து முகத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்தாள்.

டவல் உதவிக்கரம் நீட்ட முகத்தைத் துடைத்தபடி வந்தவளின் கண்களில் விழுந்தது காக்கி நிற கவர். படிகளில் ஏறும் போது மயூரியின் வார்த்தைகள் காதில் விழுந்தது. ஆனால் அப்போது இருந்த மனநிலையில் அவள் அதை மூளையில் ஏற்றவில்லை. இப்போது அதை நினைத்து முறுவல் செய்தவள் அதை கையில் எடுத்தாள்.

பிரிக்காத கவரைப் புரட்டிப் பார்த்தபடி "ம்ம்... நீ ஆர். விய விட அழகனா? அம்மா உன்ன புகழ்ந்து கொட்றாங்க. நீ எப்டி இருக்கன்னு நானும் தான் பார்க்குறேனே" என்று தலையை ஆட்டி சொன்னபடி கவரை பிரிக்க கூடவே எழுந்தது அவளது ஃபோனின் ரிங்டோன்.

அதோடு காக்கி கவரை மறந்தவளாக ஃபோனுடன் நகர்ந்தாள்.

நீங்காத ரீங்காரம் ஒன்று

கனவுலகை கலைத்துவிட,,

அதை கையேந்தி உறவாடி

மங்கையவளும் மறந்தகன்றாளே..!

டிஸ்பிளேவில் "மச்சி" என்ற வார்த்தையை பாரத்தவளது உதடுகள் விரிய ஸ்வைப் செய்து காதுக்கு கொடுத்தாள்.

சிறை பிடிப்பாயா பொற்சித்திரமேWhere stories live. Discover now