சித்திரம் 17

247 22 4
                                    


ஒரு அறையில் நீள வாக்கில் நிமிர்ந்த நடையுடன் அணிவகுத்து நின்றனர் விமான நிலையத்தின் பணியாளர்கள். இதன்யா தனது பூட்ஸ் கால்கள் தடையை உடைத்தெறிய வேகமாக நடந்துவந்தாள்.முதுகுக்கு புறமாக கைகளை கட்டிக்கொண்டவள் அந்த ஏர் கார்கோ அலுவலக தலைமை பணியாளரை ஏளன உதடு சுளிப்புடன் பார்த்தவள் ஒற்றை புருவம் ஏற்றி "எல்லாரும் வந்துட்டாங்களான்னு ஒரு தடவை செக் பண்ணிக்கோங்க சார்." என்று சொல்ல அவர் சற்றே முறைப்புடன் "மேடம்.. நீங்க போலிஸ் டிபார்ட்மெண்ட் தான் அதுக்காக எங்கள என்ன வேணாலும் பேசலாமுன்னு கிடையாது" என்றார்.

இதன்யா "ஏன் சார் டென்ஷன் ஆகுறீங்க நான் ஜஸ்ட் கேட்டேன். கேர்லசா விட்டுட கூடாதுல" என்று கேர்லஸ் என்ற வார்த்தையில் அழுத்தம் கூட்டி சொன்னவள் அவரை தாண்டி நடந்தாள். அங்கு குழுமியிருக்கும் கூட்டத்தின் முன் கம்பீரமாக நிமிர்ந்து நின்றவள் " உங்க எல்லாரையும் இங்க வர சொன்னதுக்கு காரணம் இருக்கு. ரெண்டு நாளைக்கு முன்னாடி எல்லாரும் இங்க டியூட்டில இருந்திருக்கீங்க. அன்னிக்கு குறிப்பிட்ட ஒரு கேட்ல மட்டும் சந்தேகப் படும்படியா சில விஷயங்கள் நடந்திருக்கு. சரியா மார்னிங் டென் தேர்ட்டிக்கு கேட் நம்பர் ஃபோர்ல யாரு இருந்தீங்க. அங்க என்ன ப்ராப்ளம் நடந்துச்சு?" என்று கேட்டவள் கைகளை கட்டிக்கொண்டபடி அனைவரையும் பார்வையிட்டாள்.

அந்த கூட்டத்தில் ஒருவன் "மேடம் நான் தான் அங்க இருந்தேன்." என்று ஒருவன் முன்னாள் வர "அன்னிக்கு எக்சாக்டா என்ன நடந்துச்சு" என்று கேள்வியை தொடங்கினாள். அவனோ முகத்தில் சிறிதும் மாறுதல் காட்டாமல் " நார்மல் செக்கப் இருந்தது மேடம். அப்போ ஒருத்தன் பார்க்க கொஞ்சம் வித்தியாசமா இருந்தான். நான் விசாரிச்சப்போ அவன்கிட்ட எதுவும் இல்ல. பிஹேவியர் சந்தேகப் படும்படியா இருந்தது."என்றார்.

இதன்யா பொறுமையாக அவற்றை உள்வாங்கியவள் "அவன் ஏதாவது சொன்னானா?" என்று கேட்க தலையை ஆட்டி மறுத்தவர் "இல்ல மேடம் அவன் நாங்க பேசிட்டு இருக்கும் போதே பிரச்சினை பண்ண ஆரம்பிச்சான்" என்றான். இதன்யா "சோ அவன் வேணுன்னே ப்ராப்ளம் பண்ண வந்ததா சொல்றீங்க. அப்டிதானே மிஸ்டர்..." என்று நெற்றியை கீற அவரோ "லிட்ரலி அப்டிதான் மேடம்." என்றார்.

சிறை பிடிப்பாயா பொற்சித்திரமேWhere stories live. Discover now