நவீன உடல்

29 2 0
                                    

தொண்டைக்குள் சோகம்
சுரப்பிகள் செயல்படா
நவீன மனிதவுடல் இது

ஆழிபோல் பெரும் சோகமல்ல
துளிபோல் சிறிதுமல்ல துயரம்
பதத்தால் சொல்ல முடியவில்லை

என்று முடியும் காத்திருப்பென
நொடிகளை எண்ணி யுகங்கள்
கடப்பதாக கண்கள் விரிக்கிறேன்

தனிமை தணிக்க நீயும் வந்தால்
தீராச் சோகமும் மடிந்து உதிரும்
பல வார்த்தை ஓர் நாள் பேசாதே

வேலை பளுவினூடே ஓர் அன்பு
கனிந்த இனிய வார்த்தை பேசி
என் உயிருடல் மட்டும் மீட்டுத்தா

'ன்' கவிதைகள்Where stories live. Discover now