வாழ்த்து அட்டை

112 6 5
                                    

சின்னஞ்சிறு வயதெனக்கு
சேமித்தேன் ஒன்றொன்றாய்
காதலை உரக்கச் சொல்லும்
பல வாழ்த்து அட்டைகளை

யாருக்கென்று எவர் கேட்டாலும் என்
கனவில் வரும் காதலனுக்கு என்பேன்
காதல் கனவுகள் ஒன்றொன்றாய் என்
அலமாரிக்குள் அடுக்கி வைத்தேன்

அந்த ஒருவனுக்காக பல நாள்
காத்திருந்த காத்திருப்பில் காத்த
காகித வாழ்த்து அட்டைகளெல்லாம்
படகாய் மிதந்தன கால வெள்ளத்தில்

தற்சமயம் கனவில் கண்ட காதலன்
என்னருகே இறுக்கி அணைத்தபடி
உறங்கையிலே அவனுக்காக சேமித்த
வாழ்த்து அட்டைகள் நினைவில் வந்தன

அவற்றின் நினைவாக தான் அவனுக்கு
பல வாழ்த்து அட்டைகளைப் பரிசளிக்கிறேன்
அவற்றில் ஒன்றாவது சிறு வயதில் சேமித்த
ஒரு வாழ்த்து அட்டையாய் மாறிவிடும் என்று

'ன்' கவிதைகள்Where stories live. Discover now