கருநீலம்

47 4 2
                                    

கருநீலச் சட்டையில் நீ அவ்வளவு அழகு
கருமைக்கு கண்ணன் நீலத்துக்கு வானம்
கருநீலத்துக்கும் காதலுக்கும் தொடர்புண்டு
கண்ணா! உன்னைக் கண்டு உணர்கிறேன்

ஏனைய வண்ணங்களும் உன் தோள்களை
ஏந்தித் தவழ்கையில் ஒவ்வொரு வண்ணமும்
ஏதோ ஒரு வகையில் மோட்சம் பெறுகின்றன
ஏன்? அந்த வரத்தை எனக்கும் தந்துவிடேன்!

'ன்' கவிதைகள்Where stories live. Discover now