நன்றி'கள்'

294 7 3
                                    

உன் முதல் காதல்
நான் இல்லை என
நிச்சயம் அறிவேன்

இரண்டோ மூன்றோ
எத்தனை காதலிகளோ?
நான் அறியேனெனினும்
அத்தனை பேருக்கும்
உளமார்ந்த நன்றிகள்

அவர்கள் விட்டு சென்ற
இதயக் கோட்டையில்
இன்று நின்று ஆட்சி
செய்கிறேன் உன்னை

நீயும் நன்றி செலுத்த
மறக்காதே காதலனே
என்னைப் போவென்ற
முன் காதலர்களுக்கு

'ன்' கவிதைகள்Where stories live. Discover now