கவிதை

39 4 6
                                    

'கண்ணம்மா'விற்கு ஏற்ற பதமாக
'கண்ணப்பா' எனவும்
'செல்லம்மா'விற்கு ஏற்ற பதமாக
'செல்லப்பா' எனவும்

மாற்றிய பதங்கள் வெறுமையாய்
உணர்ச்சியற்ற சொற்களாய் எனது
மனத்தை அரித்து சுரண்டின உனது
அழகுக்கும் அறிவுக்கும் ஏற்ற பதம்
தேடி அலைகிறேன் அகராதிகளில்
இதனால் தான் பெண்களில் அதீத
கவிஞர்கள் இல்லையோ?

கண்ணா கூட சரி தான் ஆயினும்
செல்லா கூட ஆண்பால் இல்லை
உனக்காக வார்த்தைகள் கோடி
கோடியாய் கண்டுபிடித்து எனது
உணர்ச்சிகளைக் கவிதைகளாய்
புனைந்து நான் தள்ள வேண்டும்

வீரா தீரா சூரா மன்மதா அழகா
மாயக்காரா வித்தைக்காரா
இன்னும் என்னென்னவோ
வார்த்தைகள் தோன்றினாலும்
இன்னும் கிடைக்கவில்லை
'கண்ணம்மா' 'செல்லம்மா'
போன்ற காந்த பதங்கள்

இந்த முயற்சி எல்லாம் செய்தால்
நான் கிழப்பருவம் எய்த நேரிடும்
நீயே சொல்லிவிடு உனக்கான
அழகான பதத்தைத் தேடித் தா
நான் அழகான கவிதைகளை
உனக்கு வாரிச் சூட்டுகிறேன்!
-பிரியா ராஜ். ஆர். எல்.

'ன்' கவிதைகள்Where stories live. Discover now