வெள்ளை மலர்கள்

184 5 3
                                    

மழைத்துளிகளுக்குள் மாயமுண்டு
மண்ணை உயிராக்கி உயிரெல்லாம்
மாளாமல் உயிராய் வாழ விண்ணது
மானுடனுக்கு வழங்கிய கொடையது!

பனித்துளிகளுக்குள் மாயமுண்டோ
பணியாமல் சிந்தித்தால் செடிகொடி
புல்வெளிகளின் புத்துணர்ச்சி பனி
படராமல் உலகை மகிழ்ச்சியாக்குமோ?

விண்ணுலகம் அனுப்பிய வெள்ளை
மழைத்துளி தான் மண்ணில் இறங்க
மலராக மாறி ஒவ்வோர் அங்கமுமாய்
வீழ புத்துணர்வு தேனாய் படர்ந்தது

'ன்' கவிதைகள்Where stories live. Discover now