எபிலாக்

677 50 37
                                    


வாழைமரம், மாவிலை தோரணம், அழகிய வண்ண கோலம், சரசரக்கும் பட்டுப்புடவை அணிந்த பெண்கள், அவர்களுக்கு ஈடாய் பட்டு வேஷ்டியில் சுற்றிய ஆண்கள் என அவ்விடமே வண்ணமயமாக இருக்க, சித்திரை வெயிலில் எவர் முகமும் சிறிதும் வடிவிடாமல் தென்னை மரங்கள் சாமரம் வீசியது. 

காலை ஏழு மணி தான் ஆனாலும் வீடே ஜெகஜோதியாக மின்னியது. எங்கு திரும்பினும் சிரிப்பின் சாயல். அழகின் பிரதிபலிப்பு. 

"டேய் மச்சான்... இங்க வா" தலையை ஆட்டி அருகில் தூரத்தில் நின்றவனை அழைத்தாள் ஆறு வயதான கிருஷ்ண ஜீவனி. தேவானந்த் - பைரவியின் மூத்த புதல்வி. 

அவள் கையில் சுமக்க முடியாத அளவு பெரிய பாத்திரத்தில் ஜிலேபி நிரம்பி வழிந்தது. அவளது குரல் கேட்டு ஓடி விளையாடிக் கொண்டிருந்த சந்தோஷ் மற்றும் உதயநிலாவின் மகன் தீசன் முறைத்தான் அமைதியாக. 

இருவருக்கும் ஒரே வயது தான். ஆனால் இருவருக்கும் இரண்டரை மாதம் தான் வித்யாசம். அந்த இரண்டரை மாதமே திஷனை பெரிய மனிதனாக காட்டியிருந்தது. அவன் தந்தையை போல அமைதி, பொறுமை என இருப்பான். 

அதே கிருஷ்ண ஜீவனி அவளது தந்தையின் மறு உருவம். எதிலும் அமர்க்களம், துறுதுறுப்பு, சேட்டை தான். பெரியவர்களுக்கு கொடுக்கும் மரியாதை, தன்னை ஒத்த வயதில் இருக்கும் சிறுவர்களுக்கு சுத்தமாக கொடுக்க மாட்டாள். அதிகாரம் தூள் பறக்கும். 

"வாடா மச்சான்... அண்ணா நீயும் வா" விக்னேஷ் மகன் ஷ்ரவனையும் உடன் அழைத்தாள். 

கையில் இருந்த பெரிய பாத்திரத்தை பாவாடை சட்டையோடு தூக்க இயலாமல் கீழே வைத்து தலை தூக்கியவள் முகமெங்கும் முத்து முத்தாக வேர்த்தது. அந்த நிலையிலும் இரட்டை குடுமி அணிந்து அதில் அழகிய மல்லிகை பூ சூடி தேவதையாக மிளிர்ந்தாள் ஆனந்தபைரவியின் பெண் குழந்தை.

ஷ்ரவன் அவளுக்கு உதவ ஓடி வர, அவனை தடுத்தான் தீசன், "போகாத ஷ்ரவன். அவ ஸ்வீட் திருடிட்டு வந்துட்டா" என்றான் அவள் காதுப்படவே. 

ஆனந்தபைரவிUnde poveștirile trăiesc. Descoperă acum