ஆனந்தம் - 4

412 30 4
                                    

"நாயகி இந்த டிரஸ் இருக்குற பெட்டி எங்க வச்சிருக்க?" 

ராஜரத்தினம் படியிலிருந்து இறங்கும் பொழுதே மனைவியை கேள்வி கேட்டுக்கொண்டே இறங்க, சோபாவில் உல்லாசமாக விசிலடித்து பேப்பர் பார்த்துக்கொண்டிருந்த மகனை பார்த்ததும் உடலில் இருந்த அழுப்பு கோவமாக மாறியது. 

"பேருக்கு தான் பிள்ளைன்னு பெத்து வச்சிருக்கேன், ஆனா இது நாள் வர எனக்கு ஒரு செங்கல் தூக்க கூட உதவுனது இல்ல. என்ன புள்ளன்னு டி இவன நீ பெத்து போட்ருக்க? வயசான காலத்துல நான் இவ்ளோ வேலை பாக்குறேனே உதவி பண்ணலாம்னு கொஞ்சமாவது தோணுதா?" 

தேவா அருகில் அமர்ந்து கைபேசியை பார்த்து சிரித்துக்கொண்டிருந்த இஷாவிற்கு சுற்றி என்ன நடக்கின்றனதென்று கூட தெரியவில்லை. 

தந்தையை உதாசீனப்படுத்தியவன், "ஏய் போய் உன் அய்யாக்கு ஹெல்ப் பண்ண வேண்டியது தான? பல்ல இளிச்சிட்டு ஒக்காந்துருக்க" தங்கையை தேவா அதட்ட, தந்தைக்கு கோவம் வந்தது. 

"அவ கொழந்த அவளை ஏன்டா மெரட்டுற? தெண்டம்" 

மீண்டும் மகனை பேச இவர்களை கடந்து சென்ற அன்னையை பார்த்து தேவா எதுவும் பேசாமல் இருந்தான். 

அதன் பிறகு பிள்ளைகள் இருவரையும் எதிர்பார்க்காமல் தம்பதிகள் இருவருமே அத்தனை பொருட்களையும் கீழே கொண்டு வந்து வைத்து காலை உணவை உண்ண உணவு மேஜை சென்றுவிட அவர்கள் வரும் முன்பு மொத்த பொருட்களையும் வாகனத்தில் ஏற்றியிருந்தான். 

உணவை முடித்து வந்த நாயகி தேவா வாகனத்தை லாக் செய்வதை பார்த்து, "டேய் நீ ஏன்டா எடுத்து வச்ச, ஒழுங்காவே வச்சிருக்க மாட்டியே" 

பயத்திலே வந்து அவனிடமிருந்த சாவியை பறித்து மீண்டும் வாகனத்தை திறந்து, "பாரு எப்படி வச்சிருக்கனு, டோர திறந்த ஒடனே கீழ மலமலனு விழுகும்" என்றார் எரிச்சலாக. 

"இப்ப தொறந்து பாத்துட்டு தான சொல்றிங்க? ஏன் விழுகல?" 

கேள்வி கேட்ட மகனை முறைத்தவர், "பேசு, திமிரா பேசு, கொஞ்சம் சம்பாதிக்கிற அகம்பாவம் உனக்கு. உன் தாத்தா மட்டும் இல்லனா இந்த காசு உனக்கு இல்ல" 

ஆனந்தபைரவிWhere stories live. Discover now