ஆனந்தம் - 6

433 32 6
                                    


"என்னடா பண்ணி வச்சிட்டு வந்துருக்க நீ?" 

வீட்டின் வாயிலுக்கு அருகில் போடப்பட்டிருந்த கயிற்று கட்டிலில் மல்லாக்க படுத்திருந்த பேரனிடம் இதோடு பத்தாவது முறையாக கேட்டுவிட்டார் இளங்கோவன். 

ஆனால் விஸ்தாரமான பஞ்சு மெத்தையில் இடம் கிடைத்தது போல் கால் மேல் கால் போட்டு வீட்டின் மேல் கூரையில் கண்ணை வைத்திருந்த தேவா, "ஏன் தாத்தா இந்த சுவரை இவ்ளோ உயரம் கம்மியா வச்சிருக்கீங்க? இன்னும் கொஞ்சம் மேல தூக்கி வச்சிருந்தா இங்க ஒரு காத்தாடிய மாட்டி விட்ருக்கலாம்" 

சாதுர்யமாக தாத்தாவின் பேச்சை மாற்றியவன் மேல் கோவமாக கண்களை பதித்தார் இளங்கோவன். 

"ஏங்க அய்யா இப்டி புள்ளைய கேள்வி கேட்டு கொடஞ்சிட்டே இருக்கிக, யய்யா நீ வா" 

வெள்ளி தட்டில் தாராளமாக உணவை வைத்து பிசைந்து வந்தார் கடற்கரைதாயம்மாள், "என்ன தான் கோவம் இருந்தாலும் சோத்து மேல அத காட்ட கூடாது ய்யா" 

உணவு என்றதும் சத்தமில்லாமல் எழுந்து அமர்ந்தவன் அருகில் உட்கார்ந்த ஆச்சியிடம், "என்ன சாப்பாடு கொண்டு வந்துருக்கீங்க?" என்றான். 

"நீ இந்த நேரம் வந்து திடுதிப்புனு நிப்பனு தெரியாதே, அதான் சாப்பாடு எல்லாத்தையும் தண்ணி ஊத்தி போட்டேன்" - கடற்கரைதாயம்மாள் 

"பழையசோறுன்னு ஒரே வார்த்தைல சொல்ல எதுக்கு இப்டி சுத்தி வளைக்கனும்" என்றாலும் வாயை நன்றாக திறந்து ஊட்டி விட சொன்னான். 

அவன் செயலில் சிரிப்பு வர, பேரனுக்கு மனதார ஒரு கவளம் உணவை ஊட்டி விட்டவர், "பழைய சோறு சாதாரண சாதத்தை விட இருவது மடங்கு உடம்புக்கு நல்லது. அதான் பாரு ஆச்சி உனக்கு கார சாரமா இருக்கணும்னு சுண்ட சூடு பண்ண ஒத்தப்பூண்டு கொழம்பு கொண்டு வந்துருக்கேன்" 

"சரி சரி பேசாம ஊட்டி விடுங்களேன் பசிக்கிது" 

முகம் வாடி கிடந்தவனின் தோற்றம் மனதை பிசைய கணவனிடம் இப்பொழுது எதுவும் பேச வேண்டாம் என கண்ணால் சைகை செய்து பேரன் வயிறார உண்டு முடிக்கும் வரை எதுவும் பேச விடவில்லை. 

ஆனந்தபைரவிजहाँ कहानियाँ रहती हैं। अभी खोजें