ஆனந்தம் - 5

442 29 11
                                    

காலையிலிருந்து ஓட்டமும் நடையுமாக தங்கள் வீட்டிற்கும் தாத்தாவின் வீட்டிற்கும் மாறி மாறி நடக்கும் அன்னையை அமைதியாக அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த பைரவி அவருடைய அமைதியை கெடுத்துவிட கூடாதென்று அவரை சிறிதும் நெருங்கவில்லை பைரவி. 

மாலை ஐந்து மணி போல வீட்டிற்கு வந்தவர் அவளுடைய அறையில் முடங்கி கிடப்பதை பார்த்து கதவை தட்ட, சில நொடிகளில் வந்து நின்ற மக்களிடம், "டிரஸ் மாத்து கடைக்கு போறோம்" என்றார். 

தேவாவுடன் ஏற்பட்ட சிறு மோதலிலிருந்து இன்னும் வெளி வராமல் இருந்தவளுக்கு வெளியில் எல்லாம் செல்ல மனம் ஒவ்வவே இல்லை. 

"நீங்க போயிட்டு வாங்க ம்மா" சற்று இடைவேளையில் தான் தேவா உள்ளான் என்பதை உணர்ந்த சீதா மகளை உள்ளே தள்ளி கதவை அடைத்தார், 

"வீடு சந்தோசமா இருக்கு பைரவி. எதுலையுமே நீ மட்டும் தான் ஒட்டவே மாட்டிக்கிற. மாமா எதுவும் கேட்டான்னா உன்ன பத்தி சொல்லுற மாதிரி இருக்கும். வேணாம். 

நாங்க அசிங்கப்பட்டது எல்லாம் போதும் ம்மா. தயவு செஞ்சு வந்துடு, சந்தோசமான நேரத்துல உன்னால என் அப்பா அம்மா சங்கடப்பட்டு நிக்க கூடாது" அன்னையின் வார்த்தையில் கெஞ்சுதல் உள்ளதா இல்லை வெறுப்பு உள்ளதா என பிரித்தறிய முடியாத அளவு இருந்தது அவர் முகபாவனை.

சூம்பிய முகத்தோடு, "வர்றேன்" என்றவள் வேறு உடையை தேட சென்றிட, நிம்மதியோடு வெளியேறினார் சீதா. 

முகத்தில் பொழிவே இல்லாமல் தயாராகி அறையை விட்டு வெளியில் வந்த நேரம் குளித்து இடையில் ஒரு ட்ராக் பாண்ட் மட்டும் அணிந்து வெற்று உடலோடு தலையை காய வைத்து நின்ற தேவாவை பார்த்ததும் உடல் நடுங்கியது பைரவிக்கு. 

பூட்டியிருந்த கதவின் மீது கால்கள் தடுமாறி சாய்ந்திட, பைரவியின் அலறலில் அவளை திரும்பி பார்த்தவன், முகமெல்லாம் வியர்த்து விரிந்த கண்களோடு இதழ்கள் நடுங்க நின்றவளை பார்த்து உச் கொட்டியவன், 

ஆனந்தபைரவிTempat cerita menjadi hidup. Temukan sekarang