ஆனந்தம் - 15

563 31 4
                                    


"சக்கர சீனி எங்க இருக்கு?" சமையலறையிலிருந்து தேவா குரல் கொடுத்தான். 

"என்கிட்ட கேக்குறீங்க? உங்களுக்கு தானே எல்லாம் தெரியும், நீங்களே தேடி எடுத்துக்கோங்க" படுக்கையறையிலிருந்து கார சாரமான பதில் வந்தது. 

"எங்கன்னு தானேடி கேட்டேன். அதுக்கு எதுக்கு இவ்ளோ கோவம்?" தணிவாய் கேட்டான் அறை வாசலில் நின்றபடி. 

"ஓ எனக்கு அப்போ கோவப்பட கூட உரிமை இல்ல, அமைதியா நீங்க என்ன சொன்னாலும் செய்யணும். இல்ல... இல்ல... அத தான நான் செஞ்சிட்டு இருக்கேன்ல?" பட்டாசாய் பொரிந்தவள் இதோடு நான்காவது முறையாக சிகையை சரியாக பின்ன முயன்றும் பலன் இல்லாமல் போனது. 

"சரி நீ போகாத" என்றான் தேவா சிரிப்பை அடக்கி. 

அவனை முறைத்தவள், "ரொம்ப பண்றீங்க நீங்க. போ போ-னு மண்டைய கழுவி விட்டு இப்ப ஒன்னுமே தெரியாத மாதிரி போகாத-னு சொன்னா என்ன அர்த்தமாம்?" என்றாள். 

இன்று பைரவியை அலுவலகத்தில் சென்று விட தான் இந்த ஆர்ப்பாட்டம். அன்று கணவன் எவ்வளவோ எடுத்து சொல்லியும் இன்னும் அவளால் அதனை ஏற்க முடியவில்லை. எத்தனை மனிதர்கள் அங்கிருப்பார்கள்.. 

அனைவரிடமும் சகஜமாக பேச வேண்டும். புதிதாக சேர்த்திருப்பதால் சந்தேகம் கேட்பதிலிருந்து அவர்களோடு இணைந்து வேலை செய்வது, சைட் விசிட் செய்து வருவது என எல்லா வேலைகளும் கூட்டாகவே செய்ய வேண்டுமே! 

பயம் தான் பைரவியின் மனம் மொத்தமும். அந்த பயத்தை எப்படி சரிசெய்வதென தெரியாமல் தான் கணவனிடம் கோவத்தை காட்டி குறைக்கும் முயற்சியில் உள்ளாள். 

இங்கு அதுவும் இல்லாமல் போனது, அவள் விதியே! 

"கடைசில உன் இஷ்டம்னு நான் சொல்லிட்டேனே சக்கரை" கட்டிலில் அமர்ந்து மனைவியின் பின்னழகை ரசிக்கும் ரசிகனாக மாறி நின்றான். 

என்ன ஒரு ஏமாற்றம் தான், தலை முதல் கால் வரை மொத்தமாக மூடி அவன் கண்களுக்கு விருந்தே படைக்கமாட்டாள். 

ஆனந்தபைரவிWhere stories live. Discover now