ஆனந்தம் - 8

440 29 12
                                    

"சந்தோஷ் ஸ்டோர் ரூம் சாவி கீழ கேக்குறாங்க இத குடுத்துட்டு வாயேன்" கீழ் தளத்திலிருந்த சமயலறைக்கும், மணமேடை இருந்த தளத்திற்கும் ஏறி இறங்கி கால்கள் வலிக்க துவங்க பேரனிடம் மளிகை பொருட்கள் இருந்த அறையின் சாவியை கொடுத்தார்.

"சரிங்க தாத்தா"

திருமணத்திற்கு இன்னும் ஒரு மணி நேரமே இருக்க அவசரமாக சமைக்க தேவைப்படும் பொருள் போல என்ற எண்ணமுடம் வேகமாக கீழே இறங்கி ஸ்டோர் ரூம் இருந்த இடத்தை நெருங்கிய பொழுது அங்கு நின்ற மாமன் மகளை பார்த்ததும் கால்கள் தடுமாறி வேகத்தை தானாக குறைத்துக்கொண்டான் சந்தோஷ்.

எப்பொழுதும் வற்றாத சிரிப்போடு மிளிரும் அவள் கண்கள் இன்று உடைந்து மிகவும் சோர்ந்திருந்தது.

சந்தோஷின் வருகையை எப்படி தான் உணர்த்துக்கொண்டதோ அந்த மனது, சரியாக அவன் வந்த திசைக்கு கண்களை திருப்பிய பெண்ணின் கண்கள் அப்பட்டமான வேதனையை சுமக்க, கண்ணீரை மறைக்க தலையை தாழ்த்திக்கொண்டாள் விக்னேஷின் தங்கை, உதயநிலா.

அசைய மறுத்து நின்ற கால்களை செயலுக்கு கொண்டு வந்து அவளை நோக்கி நடந்தவன் அவளிடம் சாவியை கொடுக்க, சந்தோஷை திரும்பியும் பார்க்காமல் அறை கதவை திறந்து வெற்றிலை பாக்கை தேட, மனம் கேட்காமல் அவளுக்கு காவலாய் நிற்கும் சாக்கில் உள்ளே சென்றான் சந்தோஷ்.

"நிலா" அந்த வார்த்தையை கூற கூட தகுதியில்லை என தோன்ற உள் இறங்கிய குரலில் அழைத்தான் அவளை.

அவன் குரலில் இருந்த குற்ற உணர்ச்சி உதயநிலா மனதை குத்தி கிழிக்க அவனிடம் திரும்பி, "நீங்க குற்ற உணர்ச்சில இருக்க அவசியம் இல்ல" என்றவள் மேலும், "இனிமேல் நான் உங்களுக்கு உதயநிலாவா இருக்கேன்"

"என்ன மன்னிச்சுடு நிலாமா" நிலாவை சுற்றி வந்து அவள் முன் நின்று இறைஞ்சினான்.

வேகமாக அவன் பக்கம் திரும்பியவள், "இதுல நான் மன்னிக்க என்ன இருக்கு? பைரவி வாழ்க்கை நல்லா இருந்தா போதும்" என்றவள் முகம் அடுத்த நொடியே அழுகையில் சிவந்தது,

ஆனந்தபைரவிWhere stories live. Discover now