ஆனந்தம் - 20

634 33 9
                                    


தேவா வீட்டிற்கு வந்த கையேடு மனைவியை அழைத்து மதுரையில் பெற்றோரையும் சகோதரியையும் அழைத்து விருதுநகர் புறப்பட்டுவிட்டான். தல பொங்கல் என இரண்டு ஜோடிகளுக்கும் விருந்து உபசாரங்கள் ஏகபோகமாக இருந்தது. 

ஒரு வார களைப்பு கூட மறைந்து தேவா வீட்டினரோடு ஒன்றிட பல மாதங்கள் அவர்களை விட்டு தள்ளியிருந்த பைரவியும் கூட அவர்களோடு சேர்ந்திட, புது இணைப்பாக பைரவியோடு இஷா ஒன்றியது தான் அனைவரையும் ஆசிரியத்தில் ஆழ்த்தியது. 

பயத்தோடு பைரவி தன்னுடைய அத்தையை பார்க்க மெல்ல தலையை அசைத்து மகளுக்கு எதுவும் தெரியாதென கூறினார். அந்த ஒரு அசைவு நிம்மதியை தந்தது. 

இஷா சகோதரனுக்காக மாறியிருந்தாள். என அவளது செய்கையே சொல்லிக்காட்டியது பைரவிக்கு. பொங்கல் திருநாள் கரும்பாய் இனிக்க அடுத்த நாள் காலை நான்கு மணிக்கே வீட்டினர் அனைவரையும் அடித்து எழுப்பி அயன்தென்கரை நோக்கி இழுத்து சென்றுவிட்டான். 

பொங்கல் அன்றே மனம் மொத்தமும் வயல், தோட்டம் என சுற்றி திரிய மாட்டுப்பொங்கல் அன்று தன்னுடைய காளைகளை சுத்தமாக பிரிந்து இருக்க முடியவில்லை தேவாவால். 

வந்த கையேடு காளைகளை குளிக்க வைத்து பொங்கல் வைத்து தெய்வமாய் வணங்கி மண் பானையில் வைத்த பொங்கலை உண்ட பிறகே உயிர் வந்தது போல் இருந்தது. 

"இப்ப சந்தோசமாடா?" தந்தை ராஜரத்தினம் கேட்க வாழை இலையில் வைத்த பொங்கலை அவர் கையிலும் கொடுத்தான். 

"நான் எப்ப ப்பா பீல் பண்ணிருக்கேன்...?" சிரிப்போடு மகன் கேட்பதும் கூட சரியாக தான் இருந்தது. அவன் வருந்தி அவர் ஒரு நாளும் பார்த்தது இல்லை. எந்நேரமும் தன்னோடு சண்டையிட்டாலும் அதை கூட அடுத்த சில நொடிகளில் மறந்து விடுவான். 

இப்பொழுது மகனையும் அவனை சுற்றியுள்ள சூழலையும் பார்த்தவர் தான் தான் ஏதேதோ கற்பனை செய்து அவன் மனதை புரிந்துகொள்ளாமல் போனோமோ என்ற வருத்தம். மகனிடம் மனம் விட்டு பேசி மன்னிப்பு கேட்கவும் கூட தயக்கம். அமைதியாக சென்றுவிட்டார். 

ஆனந்தபைரவிWhere stories live. Discover now