ஆனந்தம் - 1

2.4K 33 13
                                    




🎶
ராத்திரி நேரத்து பூஜையில்
ராத்திரி நேரத்து பூஜையில்
ரகசிய தரிசன ஆசையில்
ஹான்...ஹான்...தினம் ஆராதனை
ஹான்...ஹான்...அதில் சுகவேதனை
🎶

பாட்டு சத்தமும், விசில் சத்தமும் எட்டுத்திக்கும் அந்த இருளை கிழித்து ஒழிக்க, அதை விட வர்ணம் பூசியது போல் நிறம் மாறி மாறி மிளிர்ந்தது மேகம்.

எண்ணென்ற துன்பங்கள் துயரங்கள் இருந்தாலும் இந்த ஒரு நாளுக்காக தான் உயிரோடு இருக்கின்றோம் என்ற ஆனந்த பூச்சை முகத்தில் ஒட்டி நின்றது அந்த பட்டாளம். சுமார் என்பது வயதுக்கும் மேற்பட்டோர் அவர்கள். முபத்துபேர் இருப்பர்.

கண்களில் ஆசை மின்ன, வாயிலிருந்து ஒரு பக்கம் சிலருக்கு எச்சில் கூட வழிந்தது அவர்கள் கண்ட காட்சியில். அவர்களுக்கு பின்னால் நாற்பது முதல் என்பது வயதுக்கு மேற்பட்டோர் முகத்தை மூடிக்கொண்டும், தலையில் துண்டை போட்டுக்கொண்டும் தங்கள் அடையாளத்தை மறைத்திருக்க, அவர்களை கவனிக்கும் நிலையிலா இருந்தனர் மற்றவர்?

இதில் விசில் சத்தமும், காதை செவிடாக்கும் கச்சேரி சத்தம் என எதுவும் மனதை உற்சாக படுத்த, அத்தனை மனிதருக்கும் முப்பதுகளில் இருந்தது போல் உற்சாகம். இருக்காதா பின்ன? பிறந்ததிலிருந்து ஆடலும் பாடலும் நிகழ்ச்சியை காண்பதற்காகவே தவமிருந்தவர்களின் வரமாய் இப்பொழுது தங்கள் கண் முன்னே விருந்து படைத்திருந்தனர் அவ்வூரின் இளைஞர்கள்.

ஊரில் திருவிழா என்று பேச்சை எடுத்த நாளிலிருந்து எதிர் எதிர் துருவங்களாக மீசையை முறுக்கி சுற்றிவந்த இளவட்டங்கள் தங்களுக்குள் இருந்த பாகுபாட்டை சில நாட்கள் ஒதுக்கி வைத்து, ஊர் பஞ்சாயத்தில் வாதாடி, சண்டையிட்டு பெண்களின் சாபங்களை எல்லாம் தாராளமாய் பெற்று அனுமதி வாங்கிவிட்டனர்.

அதன் பின்னரும் ஊர் மக்கள் விடவில்லை, "இந்தாருங்க காவாலி பசங்களா... இந்த கண்றாவி அம்புட்டும் ஊருக்கு வெளிய வச்சுக்கோங்க" என்றனர்.

ஆனந்தபைரவிWhere stories live. Discover now