அவளைக் காதலித்ததில்லை

6.2K 221 53
                                    

பைக் அவள் ஊரின் எல்லையை நெருங்கியபோது, "இங்க எங்க வீட்டு தோப்பு ஒன்னு இருக்கு. அங்க நிறுத்துங்களேன்," என்றாள். ஓரிரு முறை இங்கு வந்திருந்ததால் இடத்தைக் கண்டுபிடித்து மூடப்பட்டிருந்த இரும்பு gateஇன் முன்னாள் பைக்கை நிறுத்தினேன்.

"ஏன் இங்க நிறுத்த சொன்ன?" அவள் பதிலளிக்காமல் பைக்கிலிருந்து இறங்கி கேட் இன் அருகில் நின்றாள்.

"ஒருத்தர் இறந்ததும் ஏன் மரம் வைக்கிறாங்கன்னு தெரியுமா மித்திரன்?"

அவளருகில் வந்து நின்றேன் குழப்பமாய், "மரம் வைக்கிறது நல்லது, அவர்களின் இடத்தில் அவர்கள் நினைவாக அது வளரும். அதான் சொல்லுவாங்களே,
தாவரங்கள் நல்லவை.
சண்டையிடாதவை
மனதுக்கு நெருக்கமானவை
மௌனத்தால் சிரிப்பவை
துக்கத்தில் துவளாதவை
இன்பத்தில் மகிழாதாவை
எப்போதோ  ஊற்றிய நீரிக்கு இலைகளால் பூக்களால் கனிகளால் நன்றி சொல்பவை 
பல நேரங்களில் மனிதர்களைவிட தாவரங்கள் நல்லவை"

"தாவரங்கள் நல்லவை. அதோடு குறிப்பாக நினைவஞ்சலி மரங்கள் ஊன்றப்பட்டப்பின் அவை கவனிப்பின்றி தானாக வளரும். என்னை பொருத்த்வரை நம் அன்புக்குரியவர்கள் நம்மை விட்டு பிரிந்ததும் நம்ம independentஆ வாழ கத்துக்கனும் இந்த மரங்கள் போல."

அவள் தன் ஆள்காட்டி விரலால் இருளோடு ஒட்டியிருந்த மூன்று கொய்யா மரங்களைக் கைக்காட்டினாள். "பெரிய மரம் என் பாட்டி தவறியதற்கு நான் நட்டது.  பக்கத்தில்அந்த சின்ன மரம் நித்தினுக்காக வச்சது."

நான் சொல்வதறியாது திகைத்தேன்.
உணர்ச்சியற்ற குரலில் அவள் தொடர்ந்தாள், "ஏன் நித்தினை பத்தி என்கிட்ட சொல்லலன்னு கேட்டீங்களே அதற்கு இதான் பதில். என்னைப் பொருத்தவரை நான் காதலித்த நித்தின் விபத்தில் இறந்துட்டான். நான் எதிர்பார்த்தபடியே நித்தினும் என்னை அந்நியராக தான் நடத்தினார். நீங்க காட்டிய உங்க நண்பன் நித்தின் வேறு. பழைய விஷயங்களை நீங்க தவறாக புரிந்துக்கொண்டு இப்போ நம்ம வாழுற வாழ்க்கையைப் பாதிக்கும்ன்ற பயத்துல மறைச்சுட்டேன். பயந்தமாதிரியே நடந்துட்டு."

அவளை காதலித்ததில்லைWhere stories live. Discover now