செம்புல பெயல் நீர்

4.6K 196 38
                                    

"எனக்கு பயமா இருக்கு. இது கடைசில நமக்கு எதிரா முடிஞ்சுடும்னு தோனுது," அவள் குரலில் சலனம் தென்பட்டது.

இதற்கு நித்தின் ஆறுதலாய் பேசினான், "அதான் நான் இருக்கேன்ல. என்ன நடந்தாலும் நான் இருக்கேன்."

"உங்கம்மாவோட அதிகாரத்தையும் அகங்காரத்தையும் பார்த்துட்டு தான் சொல்றீங்களா? அவங்க எதற்கும் சம்மதிக்கப்போறதில்ல," அவள் மேலும் வருந்தினாள்.

"இப்டி கவலைப்படுறது பெண்களின் காதலின் அடுத்த கட்டம் போல. முதலில் காதலை சொல்ல மறுப்பதும் சொன்னபின் பயப்படுவதும்," நித்தின் கிண்டலாய் கேட்டான்.

"இவ்ளோ தூரம் வந்துட்டு கடைசில ஒன்னும் சாத்தியம் இல்லைன்னு இருந்தா இத்தன நாளோட அன்பை எங்க கொட்டுறது?" அவள் கண்களின்  ஓரத்தில் நீர் துளிர்த்தது.

நித்தின் தன் இடது கரத்தால் அவள் முகத்தை நிமிர்த்தி தன் இன்னொரு கரத்தால் அவள் கூந்தலை நெற்றியிலிருந்து விலக்கி ஈரம் படிந்த அவள் கண்களை நோக்கி மொழிந்தான்,
"யாயும் ஞாயும் யாராகியரோ?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே"

அவள் திடுக்கிட்டு எழுந்தாள் தூக்கத்திலிருந்து. முகம் முழுக்க வேர்த்திருந்தது. இதயம் தன் இஷ்டத்துக்கு வேகமாய் ஓடிக்கொண்டிருந்தது. சில வாரங்களுக்கு முன் நித்தினைப் பார்த்ததிலிருந்து அவளுக்கு பல சிந்தனைகள் உதித்தாலும் இதுவே முதன்முறை அவன் அவளின் கனவில் தோன்றியது. இந்த அறிகுறி  மனதுக்கு சரிதாகப்படவில்லை. கட்டிலின் பக்கத்திலிருந்த standஇல் இருந்த போனைப் பார்த்தால் மணி 5 என்றுக் காட்டியது. இனிமேல் தூக்கம் தேடினாலும் வராது என்று புரிந்தவளாய் அன்றைக்கான வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தாள். மித்திரன் 7.30மணிக்கு எழுந்து தன் வாரநாள் இயல்பு நிலைக்குத் திரும்பினான். அவர்கள் நேற்று ஞாயிறு முழுக்க மௌனமாய் ஒருவரை ஒருவர் தவிர்த்தது இப்போது திங்கட்கிழமை காலையில் ஒரே நேரத்தில் ஆபீஸ் கிளம்புப்போது இடையூறாய் அமைந்தது. என்ன சொல்வதென்று இருவருக்கும் தெரியாததால் ஒன்றும் கண்டுக்காதவாறு அமைதி காத்தனர். இறுதியில் அவளே தன் அமைதிக் கொடியைக் காட்டினாள் லஞ்ச் உடன்.
"இந்தாங்க உங்களுக்கும் உங்க ப்ரெண்ட்க்கும் லஞ்ச்," என டேபிளில் வைத்தாள்.

அவளை காதலித்ததில்லைWhere stories live. Discover now