ஈர்ப்பு

4.7K 215 54
                                    

ஆபீஸ் செல்ல விரும்பாதவள் நித்தினுக்குச் சமைக்க சொன்னேன் என்ற ஒரே காரணத்துக்காக எழுந்து எல்லா வேலைகளையும் அரக்க பரக்க முடித்து என்னுடன் ஆபீஸ் கிளம்பினாள். அதிகாலையில் அவளிடம் முகம் கொடுத்து பேசாததால் இப்பொழுது குற்ற உணர்ச்சி உறுத்தியது. அதுவும் அங்கு அவள் தனியாக அமர்ந்து சாப்பிட்ட காட்சியும் பேச்சுத் துணைக்கு இருங்களேன் என்று கெஞ்சியதும் கண் முன் தோன்றி மனதைக் குடைந்தது. தவறுகளுக்குப் பிரயாசித்தமாய் இன்றைய டின்னருக்கு வெளியே கடையிலிருந்து வாங்கி வருகிறேன் என்று ஒரு மெசேஜைத் தட்டிவிட்டேன் 5 மணிக்கு.

"இன்னைக்கு நான் கோவிலுக்கு போறேன். நீங்க அங்க வந்து பிக் அப் பண்ண முடியுமா?" வினவினாள் அவள்.

ம்ம்ம் என்று பதிலளித்துவிட்டு அரை மணி நேரத்துக்குப் பிறகு காரை ARR ரோட் இல் அமைந்திருக்கும் பெரிய கோயிலுக்குச் செலுத்தினேன். எக்காலத்திலும் பெண்களுக்கு ஏனோ கடவுள் மேல் உள்ள நம்பிக்கை முழுமையாகக் கரைவதில்லை. கடவுள் மேல் ஓர் இனம்புரியாத ஈர்ப்பு இருந்ததுக்கு அவர் புரியாத புதிராகவே இருப்பதும் காரணம்.

காரை பார்க் செய்துவிட்டு கோவிலுக்குள் அடியெடுத்து வைத்தபோதே அவளை அடையாளம் கண்டுக்கொண்டேன். அங்கிருந்த நாலைந்து மக்கள் அர்ச்சகருக்காகக் காத்திருக்க இவள் மட்டும் ஓரத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த அகல்விளக்குகளின் அருகில் அமர்ந்து தரையைப் பார்த்துகொண்டிருந்தாள். ஓரிரு விளக்குகளே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பலவீனமாய் காற்றில் ஊசலாடிக்கொண்டிருந்தன. அவளருகில் வந்து தரையில் அமர்ந்ததும் வலது பக்கம் திரும்பி என்னைப் பார்த்து புன்னகைத்தாள். இதழில் பூத்த புன்னகை கண்களை எட்டவில்லை. அவள் கன்னத்தில் முத்தமிட்டேன் அன்பாய், ஆறுதலாய். முரைத்துக்கொண்டே, "பப்ளிக்ல இருக்கோம்," என்றாள்.

"இருக்கட்டும். என் wifeஐ தான கொஞ்சுறேன்! சரி என்ன சொன்னார் உங்க கடவுள்?" சிரிப்புடன் கேட்டேன்.

அவளை காதலித்ததில்லைحيث تعيش القصص. اكتشف الآن