புகை

7.6K 286 28
                                    




காரில் பாதி தூரம் வரை சென்று அவளை மெட்ரோ ஸ்டேஷனில் இறக்கிவிட்டேன். அவளுடைய ஆபீஸ் என்னுடைய ஆபீஸ் இலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருந்தாலும் இந்த டிராபிக் இல் செல்வதற்குள் அரை மணி நேரம் ஆகிவிடும். நான் U turn செய்து என் வேலையிடத்துக்கு வருவதற்குள் இன்னொரு அரை மணி நேரம். ஆகையால் மெட்ரோவில் இரண்டு ஸ்டேஷன் தள்ளி இறங்கி ஆபீஸ்கு நடந்து சென்றுவிடுவாள்.

"இன்னைக்கும் சீக்கிரம் வீட்டுக்கு வந்து surprise பண்ணிடாத" என்று சொன்னேன் அவள் காரிலிருந்து இறங்கும்போது.

"ஏன்? சீக்கிரம் வரக்கூடாதா?"

"நீ வந்தாலும் நான் அங்க இருக்கணுமே. quarterly check ஆரம்பிக்கப்போறாங்க பேங்க் இல்"

"இந்த வாரத்தோடு முடிஞ்சிருமா?"

"அப்படி தான்னு நினைக்கிறேன்"

அங்கிருந்து வலது பக்கம் காரை திருப்பி இருபது நிமிடங்களில் நான் பணிபுரியும் பேங்க் வெளியே எனக்காக ஒதுக்கப்பட்ட பார்கிங் இடத்தில் காரைப் பார்க் செய்துவிட்டு உள்ளே நுழைந்தேன். என் cabinகு செல்லும் வழியிலேயே மனோஜின் மேசையும் இருந்தது. வழக்கம் போல் அவன் அங்கு இல்லை. அவன் வந்ததும் என்னைத் தான் முதலில் வந்து பார்ப்பான் என்று அறிந்து நான் என் cabinகுள் சென்றேன். அன்று review பார்க்க வேண்டிய வேலைகளை ஒரு சிறிய post-it இல் எழுதி என் கணினியின் ஓரத்தில் ஓட்டினேன். அன்று என்ன முடிக்கவேண்டும் என்று எழுதினால் பாதி வேலை முடிந்த மாதிரி ஒரு திருப்தி.

"Good morning boss" கதவு சத்தத்தோடு திறந்தது.

எதிர்பார்த்தது போல் மனோஜ் அங்கு நின்றான்.

"Morning! தினமும் சரியா கால் மணி நேரம் லேட் ஆ வர்ற இந்த punctuality நல்லா தான் இருக்கு"

"தினமும் சரியா அதே நேரத்துக்கு வர்றேன் டா. இதுவும் punctuality தான்" என்று சமாளித்தான்.

இந்த ஆபீஸில் எனக்குக் கீழ் வேலை செய்தாலும் பொறாமை இன்றி என்னை நண்பனாகக் கருதும் ஒரே ஆள் இவன் தான். அதற்கும் காரணம் இருக்கிறது. மனோஜ் கொஞ்சம் சோம்பேறி ஆனால் தன்னுடைய நகைச்சுவைத் திறனின் மூலம் தன் வேலையைத் தக்க வைத்துக் கொண்டான். கஷ்டப்பட்டு உழைத்து அதை அனுபவிக்காமல் இருப்பது சுத்த முட்டாள்தனம் என்று கூறும் அவன் தன் நிலையை நன்றாகவே அறிந்திருந்தான். ஆதலால் எனக்குக் கீழ் வேலைப் பார்ப்பதை அவன் ஒரு பொருட்டாக எண்ணவில்லை.

"Head of Loan and Approvals தங்களை quarterly reviewக்கு அன்புடன் வரவேற்கிறார்ன்னு flex போர்ட் மாட்டியாச்சா ?" என்று கிண்டல் செய்தான் மனோஜ்.

"அடேய், reviewகான வேலையை நீயும் தான் செய்யணும். இன்னைக்கு guarantor information சரி பார்க்கணும். நேத்து முடிச்ச loan amount tally ஐ கொண்டு வர சொல்லு, அதை நான் பார்க்கணும்."

"காலையிலேயே பாஸ் கூவ ஆரம்பிச்சிட்டாரு, சரி வர்ரேன்" என்று attendance போட்டுவிட்டு மனோஜ் நகர்ந்தான்.

என் கீழ் இரண்டு departmentகளாக ஏழு பேர் பணிபுரிந்தனர். என் வேகமும் விவேகமும் எனக்கு இந்த தலைமைத்துவ பொறுப்பை கொண்டுவந்து சேர்த்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக Standard Chartered பேங்கின் சென்னைக் கிளையில் வேலை.

சரியாக 11 மணிக்கு மீண்டும் என் cabin கதவு திறந்தது. கதவைத் தட்டாமல் உரிமையாக நுழைந்தால் கண்டிப்பாக அது மனோஜ் தான். என்னடா என்று கம்ப்யூட்டரைப் பார்த்துக் கொண்டே விசாரித்தேன்.

"ஒரு தம் அடிச்சிட்டு வரலாம்டா. லஞ்ச்க்கு இன்னும் 2 மணி நேரம் இருக்கு, கொஞ்சம் வெளிய போன மாதிரி இருக்கும்."

சரி என்று நானும் அவனோடு வங்கியின் பின் புறத்தில் இருந்த கான்டீன் இன் வெளியில் சற்று ஒதுக்குபுறமாக நின்றேன். மனோஜ் கையில் இருந்த சிகரெட்டை ஆட்டிக்கொண்டே பேசினான். அவனுடைய மஞ்சள் படிந்த நகங்கள் எனக்கு அருவருப்பைத் தூண்டியது. நான் என்னையே கடித்துக்கொண்டேன். ஆம், நானும் ஒரு காலத்தில் இவனைப் போல தான் வாழ்ந்தேன். பாக்கெட் இல் போன் உடன் ஒரு pack சிகரெட் உம் இணைபிரியாத சகோதரர்கள் போல் இருக்கும். அவன் ஊதிய சிகரெட்டின் புகை என் நுரையீரலில் படிந்து என் நினைவுகளை அவளின் பக்கம் திசைத் திருப்பியது.

திருமணமாகி சரியாக ஒரு வாரம்.

"நான் சிகரெட் பிடிப்பேன்னு வீட்டுல சொன்னாங்கள்ள?" சிகரெட்டை பத்த வைக்கும்போது அவளிடம் கேட்டேன்.

(ரொம்ப கியூட் சீன் அடுத்த chapter இல் வருது! Support the story with your votes and comments!)

அவளை காதலித்ததில்லைWhere stories live. Discover now