பிடிக்கலையா?

5.2K 197 13
                                    

அலாரம் 7.30amகு அடித்தபோது அதை அமத்த விரல்கள் தலையணையின் ஓரத்தைத் தடவின. Snooze பட்டனை அமுக்கிவிட்டு திரும்பி படுத்தால் அவளின் கூந்தல் மயில் தோகைப்போல் விரிந்து படர்ந்திருந்தது என் மாரில். அவளின் கதகதப்பு சில்லென்ற குளிர்காலையில் இதமாய் அரவணைத்தது. பெருமூச்சுடன் அவளை நெருக்கி கட்டியணைத்ததும் தான் தோன்றியது, "அவளுக்கு ஆபீஸ்கு லேட் ஆச்சே."

தோளைத் தட்டி எழுப்பியபோது "நான் நாளைக்கு ஆபீஸ் போய்க்கிறேன்" என்று பதிலளித்துவிட்டு நித்திரையில் மூழ்கினாள். நான் எழுந்து ஜன்னலின் திரையை நீக்கியதும் கதிரவனின் ஒளி முகத்தில் பட்டதும் விரல் பட்டதும் நாணும் தொட்டாச்சிவிங்கி செடிபோல போர்வையை இழுத்து போர்த்தினாள். அவளின் செயல்களை ரசிக்கும் பொறுமை இல்லை எனக்கு விடியற்காலை வேளையில் ஆனாலும் வாயைத் திறக்காமல் பாத்ரூமுக்குள் நுழைந்தேன். குளித்துவிட்டு வெளியில் வந்தால் போர்வையை நெஞ்சோடு அணைத்து மெத்தையில் உட்கார்ந்திருந்தாள் யோசனையுடன். 

"நானும் கிளம்பி வர்றேன், வெயிட் பண்ணுங்கன்னு சொன்னா கோச்சுக்குவீங்களா?" கன்னத்தில் கைவைத்து தலையை ஒரு பக்கமாக சாய்த்து கேட்டாள்.

"கொஞ்சம்."

"அப்போ ஒரு அரை மணி நேரம் வெயிட் பண்ணுங்க" என்று சொல்லிவிட்டு குதித்தோடினாள். பிறகு, லேப்டாப் bagஐ தூக்கும்போது அருகில் ஒரு லஞ்ச் bagஐயும் வைத்தாள். "உங்களுக்கும் உங்க colleagueக்கும்". முன் கோபப்பட்டாலும் வாயைத் திறக்காமல் இருந்தது இப்போது பலனைத் தந்தது. இந்த அவசரத்திலும் அலட்டிக்கொள்ளாமல் நியாபகம் வைத்து நான் கேட்டதால் சமைத்து கொண்டுவந்ததற்கு இன்னும் சிறிது நேரம் காத்திருந்திருக்கலாம் அவளை நச்சரிக்காமல்.

அவளை metro station இல் இறக்கிவிட்டு என் ஆபீஸ் செல்லும் பாதை வரை சிறு புன்னகை இதழின் ஓரம் ஒளிர்த்தது. ஆபீஸ்வேலை முன்பைவிட இப்போது சற்று மெதுவாகவே சென்றது நானும் நித்தினும் புதிய schemeகளை வடிவமைக்கும் வரை. ஆனால் எனக்கும் நித்தினுக்கும் அதற்கு மாறாய் இருந்தது. மதிய நேரம் வந்ததும் வெளியில் சாப்பிட செல்ல எத்தனித்த நித்தினை வழியிலேயே நிறுத்தி கான்டீன்கு அழைத்து வந்தேன். நானும் நித்தினும் அமர்ந்தபோது எங்களை லாவண்யா அணுகினாள். departmentஇல் ஒருத்தராய் எங்களோடு அவள் சாப்பிட அமர்ந்ததை பெரிய விஷயமாக நான் பொருட்படுத்தவில்லை. உணவை மனமார பாராட்டிவிட்டு என்னுடன் கலகலப்பாகப் பேசிய நித்தின் மீண்டும் வேலையைத் தொடங்க எழுந்தபோது, "மித்திரன், இனிமேல் உன் வைப் ஐ எனக்காக சமைக்க சொல்லாதீங்க."

அவளை காதலித்ததில்லைWhere stories live. Discover now