பிடிக்கலையா?

Start from the beginning
                                    

முகத்தில் அறைந்தது போல் இருந்தது ஒரு கணம், "ஏன்? நீ வெளிய சாப்பிடும்போது அங்க உள்ளவங்க வேடிக்கையா பார்க்குறது நல்லாவா இருக்கு?"

"அது எனக்கு பழக்கப்பட்டது தான். ஆனால் இன்னொருத்தவங்க நமக்காக சமைக்கிறது, இல்ல வேண்டாம்."

"என் வைப் இத பெருசா நினைக்கல, கொஞ்ச நாள் தான நீ இங்க இருக்கப்போற."

"இல்ல மித்திரன், பெண்கள் வெளிப்படையா ஒன்னும் சொல்லமாட்டங்க நாம தான் புரிஞ்சிக்கணும். நம்ம friends ஆக இருக்கணும்னா இத விட்டுருங்க."

சின்ன பிரச்சனை நட்பைக் குறிவைக்கும் என்று நான் எண்ணவில்லை இருந்தாலும் அதற்கு ஒப்புக்கொண்டேன். அவன் சொல்வதிலும் நியாயம் இருக்குமோ? அவனிடமிருந்து விடைபெற்று என் cabin கதவைத் திறந்தால் அங்கே லாவண்யா நின்றாள் குத்துக்கல்லாக. அவள் எங்களருகில் அமர்ந்ததைக் கூட மறந்துவிட்டு நித்தின் மேல் மட்டுமே என் முழு கவனமும் இருந்திருந்தது.

அவளைக் கண்டதும் அன்று என் மனைவி கேட்ட கேள்வி தான் மனதில் உதித்தது. "லாவண்யா மனோகரன்?" என் மனைவியின் குரல் என் இதயத்தில் எதிரொலித்து அலைகளை எழுப்பியது. ஆனால் அவள் வெகு அப்பாவியாக என் பதிலை ஏற்றுக்கொண்டாள். 

dashboardஇல் இருந்த கார்ட் ஐ எடுத்து கூர்ந்து பார்த்தபோது, "லாவண்யா போனை மட்டும் தானே பர்ஸிலிருந்து எடுத்தாள். கார்ட் தானாகத் தான் விழுந்ததா?" என்ற கேள்வி மூளையைக் குடைந்தது. அனாவசியமாக யோசிக்கிறோம் என என்னையே கடித்துக்கொண்டு ஆபீஸினுள் சென்றேன். லாவண்யாவின் மேசையைத் தாண்டுகையில் யாரும் பார்க்கும் முன் கார்ட் ஐ மேசையின் ஓரத்தில் வைத்துவிட்டு என் cabinகுள் நுழைந்தேன். அவள் மேசையிலிருந்து நான் நழுவுவதைக் கண்ட மனோஜ் குழப்பத்துடன் என்னை நோக்கினான். பிறகு சொல்கிறேன் என தலையசைத்துவிட்டு என் வேலையைக் கவனித்தேன்.

இப்போது என் முன் நடுக்கத்துடன் நின்றாள் லாவண்யா மனோகரன்.

"any issues லாவண்யா?" அதிகார தொனியில் கேட்டேன்.

"இல்ல சார்."

PC இலிருந்து கண்கள் நிமிர்ந்து அவளை நோக்கின.

"It's a personal issue." சொல்லிவிட்டு என் எதிர்வினைக்காகக் காத்திருந்தாள். நான் ஒன்றும் பேசாமல் முகத்தை ஒருமுகப்படுத்தினேன்.

என்னிடமிருந்து எந்த reactionஉம் வரவில்லை என்பதால் அவள் தொடர்ந்தாள், "Sir, are you avoiding me?"

குழப்பத்தை வெளிக்காட்டாமல் அதே நிதானத்துடன், "I have replied all of your emails I believe," என ஆங்கிலத்திலேயே பதிலளித்தேன்.

"நான் பர்சனல் ஆ கேட்குறேன். அன்னைக்கு லஞ்ச் போனதிலிருந்து நீங்க என்கிட்டே ஒரு வார்த்தை பேசல அதுவும் இன்னைக்கு உங்க டேபிளில் தான் உட்கார்ந்து இருந்தேன் லஞ்ச் கு."

பிரச்சனையை உடனடியாக தீர்க்க, "இது ஒரு விஷயமே இல்ல. இன்னைக்கு நித்தின்கிட்ட நிறைய கேட்டுட்டு இருந்தேன், we have the same interests," என முற்றுப்புள்ளி வைத்துவிட்டு PCயைத் தட்டினேன்.

தான் எதிர்பார்த்த பதில் வராததால் லாவண்யாவின் குரல் பிடிவாதமாய் ஒலித்தது, "அப்போ உங்களுக்கு என்னை பிடிக்கலையா சார்?"

பெண்களுக்கே உரிதான, அதிகம் அவர்கள் கேட்கும், பதிலை அதிகம் கேட்க விரும்பும் கேள்வி இது, "உங்களுக்கு என்னை பிடிக்கலையா?" பிடிக்குமா என்பதைவிட பிடிக்காதா என்றே கேட்கும் தொனி பல பொருளைக் கொண்டது பல ஏக்கங்கள் அடங்கியது. தான் விரும்பும் பதிலை வரவழைக்கக் கேட்கப்படும் கேள்வி இது. அவளும் இதை என்னிடம் கேட்டிருக்கிறாள். சிவந்த கண்களோடு தொண்டைக் கட்டிய அந்த கரகரப்பான குரலில் அவள் கேட்டிருக்கிறாள். லாவண்யாவுக்கு சற்று சூதானமாக தான் பதில் அளிக்க வேண்டும்.

[Late update but give me your comments, how was it? 

"உங்க free டைம் இல் நீங்க என்ன பண்ணுவீங்க" ஒருத்தவங்க கேட்டதும் தான் தோனுச்சு, எனக்கு இப்போ சுத்தமா டைம் இல்லைன்னு. I feel tired but I want to take some time off my busy schedule for me. So,  writing is my way of giving time for myself. 45 days இல் chapter 20 வரையாவது எழுதலாம்னு முடிவெடுத்துட்டேன். எழுத்துப்பிழை, grammar பத்தி ரொம்ப அலட்டிக்காம முதல எழுதி முடிப்போம்னு. Support பண்ணுங்க மக்களே :) இந்த chapterகு பொருத்தமான போட்டோ இருந்தாலும் ஷேர் பண்ணா அதையும் போட்டுறலாம். See you soon;) ]

அவளை காதலித்ததில்லைWhere stories live. Discover now