51 இறுதி பகுதி

Start from the beginning
                                    

"பயப்பட ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டு, இதையெல்லாம் செய்ய சொல்றீங்க?" என்றான் மாமல்லன்.

 அவன் கேள்விக்கு செவி சாய்க்காத அவர்,

"முக்கியமான ஒன்னை சொல்ல மறந்துட்டேன். மூணு மாசத்துக்கு நீ அவகிட்ட இருந்து தள்ளி இருக்கணும்" என்றார்.

அதைக் கேட்டு அதிர்ந்த மாமல்லன்,

"என்ன்னனது....??? எதுக்காக?" என்றான்.

"அப்போ தான் குழந்தைக்கு எந்த பிரச்சனையும் இருக்காது"

"எந்த குழந்தை?" என்றான் முகத்தை சுருக்கி.

 இளந்தென்றலின் கன்னங்கள் சிவந்ததை கவனித்த சாரா,

"உன் புருஷனுக்கு சொல்லி புரிய வை நான் கிளம்புறேன்" என்று கூறிவிட்டு, விஷயத்தைப் புரிந்து கொண்டு விட்ட பரஞ்சோதியையும் தன்னுடன் இழுத்துக் கொண்டு நடந்தார்.

"அவங்க எந்த குழந்தையை பத்தி சொல்றாங்க?" என்ற மாமல்லன் அவள் முகத்தில் தவழ்ந்த புன்னகையை பார்த்து ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றான். விஷயத்தை புரிந்து கொண்டு,

"மை... காட்..." என்று அவளை சந்தோஷமாய் அணைத்துக் கொண்ட அவன்,

"இதைப் பத்தி உனக்கு முன்னாடியே தெரியுமா?" என்றான்.

"நிச்சயமா தெரியாது... கன்ஃபார்ம் பண்ணதுக்கு பிறகு உங்க கிட்ட சொல்லலாம்னு நினைச்சுகிட்டு இருந்தேன். ஆனா அதுக்கு முன்னாடியே உங்களுக்கு தெரிந்திடுச்சு"

"உடனே உனக்கு ஏதாவது கொடுக்கணும்னு தோணுது. ஏதாவது கேளு"

"எனக்கு எதுவும் வேணாம். தேவைக்கு அதிகமாவே எனக்கு எல்லாம் கிடைச்சிருக்கு"

"நீ ஒரு போரிங்கான வைஃப். மத்த வைஃப் மாதிரி நீயும் புருஷனை எப்படி டார்ச்சர் பண்றதுன்னு கத்துக்கணும்"

"மாட்டேன். என் புருஷன் மத்த புருஷன் மாதிரி இல்ல..."

 "ஓகே ஃபைன், நீ நாளையிலிருந்து ஆஃபீசுக்கு வர வேண்டாம். நீ ரெஸ்ட் எடுத்துக்கோ"

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Where stories live. Discover now