8 விரும்புகிறேன்

1K 58 9
                                    

8 விரும்புகிறேன்

சொட்ட சொட்ட நனைந்தபடி வீடு வந்து சேர்ந்தான் மாமல்லன். அவன் அப்படி நனைந்து கொண்டு வந்ததற்கான காரணத்தை ஓரளவு உகித்து கொண்ட பரஞ்சோதி, அவனிடம் ஒரு துண்டை நீட்டினான். அதை வாங்கி தன் தலையை துவட்ட துவங்கினான் மாமல்லன். அதை செய்யும் போது, அவன் இந்த உலகத்திலேயே இல்லை என்பதை புரிந்து கொண்டான் பரஞ்சோதி. அவன் எண்ணம் சரி தான். தென்றல் என்னும் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த மாமல்லன், அவளிடம் தன்னை முழுமனதாய் தொலைத்துக் கொண்டிருந்தான். அவனை காந்தம் போல் இழுத்துக் கொண்டு இருந்தாள் தென்றல்.

தனது நண்பனின் நிலை கண்ட பரஞ்சோதி தவிப்புக்கு உள்ளானான்.  இது நாள் வரை, எதன் மீதும் விருப்பம் இல்லாமல் இருந்த மாமல்லன், முதன் முறையாய், ஒன்றின் மீது விருப்பம் கொண்டுள்ளான். அதை நினைக்கும் போதே அவனுக்கு கதி கலங்கியது. இப்போதைக்கு அவனிடம் எதையும் சொல்ல விரும்பவில்லை பரஞ்சோதி. ஆனால், இதற்கு விரைவிலேயே ஏதாவது செய்தாக வேண்டும் என்று நிச்சயத்துக் கொண்டான்.

......

முற்றிலும் குழம்பிப் போயிருந்தாள் தென்றல். யார் அந்த மனிதன்? அவனது பெயர் என்ன? அவன் எங்கிருந்து வருகிறான்? அவளுக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் அவனோ, அவளுடன் சந்தோஷமாய் சுடுகாட்டிற்கும் வருவேன் என்கிறான். அவன் அவளுக்கு உதவி செய்தது என்னவோ உண்மை தான். அவனுக்கு அவள் நன்றி கடன் பட்டிருக்கிறாள் தான். அதற்காக அவன் என்ன வேண்டுமானாலும் பேசிவிடலாமா? ஒன்றும் புரியாமல் கண்ணை மூடினாள். மழை தூரல் ஏற்படுத்திய ஈர முகத்துடன் அவள் கண்களுக்குள் மாமல்லன் தோன்றினான். திடுக்கிட்டு கண் திறந்தாள். ஏன் அவன், அவளை விழுங்கி விடுபவன் போல் அப்படி ஒரு பார்வை பார்த்தான்? அவனது பார்வை ஏன் அவ்வளவு கூர்மையாய் இருந்தது? அவனது கண்கள் சொல்ல நினைப்பது என்ன? தாயே மீனாட்சி என்னை காப்பாற்றுங்கள்... என்று பிரார்த்தித்துக் கொண்டாள்.

மறுநாள்

வேலைக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள் தென்றல். போதுமான நேரம் இருந்ததால், அவள் அவசரம் காட்டவில்லை. விடியற்காலையிலேயே எழுந்து, தேவையான அனைத்தையும் தயார் செய்து விடுவது அவளது வழக்கம்.

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Where stories live. Discover now