36 முன்னா...

1K 66 16
                                    

35 முன்னா

"உனக்கு இவனோட பெயர் தெரியாதா?" என்றான் மாமல்லன்.

"முன்னா" என்ற இளந்தென்றலை நம்ப முடியாமல் பார்த்து கொண்டு நின்றான் மாமல்லன்.

இந்த பெண் தான் எவ்வளவு அப்பாவி... அவள் யாருக்காக காத்திருக்கிறாளோ அவனது உண்மை பெயர் கூட அவளுக்கு தெரியவில்லை. கண்களை மூடி புன்னகை புரிந்தான் மாமல்லன். ஒரு முறை, அவனது அம்மா கூறியது அவன் நினைவுக்கு வந்தது.

{"முன்னா..."

"அம்மா ப்ளீஸ், இந்த மாதிரி,  முன்னா, சின்னான்னு செல்லப் பெயர் வச்சி  கூப்பிடுறத எல்லாம் நிறுத்துங்க... எனக்கு தான் அழகான பேர் வச்சிருக்கீங்க இல்ல? அப்படியே கூப்பிடுங்களேன்..." என்றான் முன்னா என்னும் மாமல்லன்.

"சரிப்பா... நீ ரொம்ப பெரிய பையன் தான், ஒத்துக்கிறேன். உன்கிட்ட நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்னு நினைக்கிறேன். ஆனா, அதை சொல்ல ஏத்த வயசு இது இல்ல. ஆனா, என்னமோ தெரியல, அதை பத்தி உனக்கு இப்பவே ஒரு ஹின்ட் கொடுக்கணும்னு தோணுது. இப்போ நான் சொல்றதை ஞாபகம் வச்சுக்கிட்டு, உனக்கு பத்தொன்பது வயசு ஆகும் போது, அதை பத்தி என்கிட்ட கேளு"

"எதை பத்தி மா?"

"தங்கம்"

"தங்கமா? அது ரொம்ப முக்கியமான விஷயமா?"

"ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம்" }

இளந்தென்றல் அடிக்கடி கூறும், *நடக்கும் எல்லாவற்றிற்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது* என்பதை நம்பாமல் இருக்க முடியவில்லை அவனால். அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்த இளந்தென்றலை பார்த்து புன்னகை புரிந்தான் மாமல்லன். அப்படி என்றால், இது எல்லாமே அவனுக்கான போராட்டம் தானா? அவள் செய்தது எல்லாம் அவனது அம்மாவின் விருப்பத்தை நிறைவேற்ற தானா? அவள் எப்பொழுதுமே அவனுடையவளாக தான் இருந்திருக்கிறாள். அந்த நினைப்பு அவனுக்கு பரவசம் தந்தது.

"இதுக்காக தான் நீ சுந்தரேசனை முன்னான்னு கூப்பிடுறியா?"

"அது உங்களுக்கு இன்னமும் ஞாபகம் இருக்கா?"

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Where stories live. Discover now