4 இருவரும் ஒன்று தான்

1.2K 71 16
                                    

4 இருவரும் ஒன்று தான்...

தன் முன்னாள் நின்றிருந்த பெண்ணை பார்த்து திகைத்து நின்றான் மாமல்லன். தான் பார்த்துக் கொண்டிருப்பது உண்மை என்பதை அவனால் நம்ப முடியவில்லை. அவள் ஏதாவது பேச மாட்டாளா என்று அவளை பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு விஷயத்தை நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும் அவனுக்கு. அவளுடைய குரல்... பேசு பெண்ணே...!

அவன் துரத்திக் கொண்டு வந்தது, அன்று துப்புரவு பணியாளருக்காக பரிந்து பேசிய பெண்ணை, ஆனால் அவன் முன் நின்றதோ, அவன் மருத்துவமனையில் சேர்த்த பெண்ணை. மந்திரத்தால் கட்டுண்டவன் போல் நின்றான் மாமல்லன். அவளது குரல், அவனை அந்த மந்திரத்திலிருந்து வெளியே கொண்டு வந்தது. அதே குரல்... அப்படி என்றால், அவன் சந்தித்த இரண்டு பெண்களும் ஒருவர் தானா? இப்படி கூட நடக்க முடியுமா? வெவ்வேறு விதத்தில் அவனைப் பீடித்திருந்தது ஒரே பெண்ணின் நினைவு தானா? என்ன நடக்கிறது?

"என்னை மன்னிச்சிடுங்க... நீங்க வந்ததை நான் கவனிக்கல. எனக்கு இவ்வளவு பக்கத்துல ஒருத்தர் இருப்பாருன்னு நான் எதிர்பார்க்கல" என்றாள் தன் கண்ணை கசக்கியபடி. காற்றில் பறந்த குங்குமம் அவள் கண்ணில் பட்டு விட்டது.

கீழே விழுந்து கிடந்த குங்கும கிண்ணத்தில் அவள் பார்வை சென்றது. இன்னும் சிறிதளவு குங்குமம் அதில் மீதமிருந்தது. அதை எடுப்பதற்காக அவள் குனிய முற்பட்ட போது தான், தன் எதிரில் நின்று கொண்டிருந்த மனிதன், அவள் கரத்தை பற்றிக் கொண்டிருப்பதை அவள் உணர்ந்தாள்.

"என் கையை விடு" என்பது போல் அவனை நோக்கி ஒரு பார்வையை வீசினாள்.

அவன் அவளது கையை விட்டவுடன், அவள் குங்கும கிண்ணத்தை எடுத்துக்கொண்டு, பூசாரியை நோக்கி ஓடினாள். சாவி கொடுத்த பொம்மையை போல் அவளை பின்தொடர்ந்து சென்றான் மாமல்லன்.

"மன்னிச்சிடுங்க சாமி, குங்கும கிண்ணம் தவறி கீழே விழுந்துடுச்சு. ஏதாவது தப்பா நடந்திடுமோ?" என்றாள் கவலையுடன்.

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Where stories live. Discover now