33 மனைவியாய்...

970 64 12
                                    

33 மனைவியாய்...
 
*இளந்தென்றலை எப்படியும் உனக்கு மனம் முடித்து வைப்பேன்* என்ற தன் வாக்கை நிறைவேற்றி விட்டான் பரஞ்சோதி.

அப்படிப்பட்ட நண்பனை அடைந்ததற்காக கர்வம் கொண்டான் மாமல்லன்.

"உன்னோட பாயின்ட் எனக்கு புரியுது. ஆனா இளந்தென்றல்? அவ எனக்கு வைஃப் ஆயிட்டான்றதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். ஆனா, அவளோட வாழ்க்கையோட முடிவை நம்ம எப்படி எடுக்க முடியும்? நம்ம அவளை ஃபோர்ஸ் பண்றோம்னு உனக்கு புரியலையா?" என்றான் வேதனையுடன்.

இளந்தென்றலின் இளவயது  நிச்சயதார்த்தம் குறித்து யோசித்த பரஞ்சோதி,

"எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம், இந்த விஷயத்தை நான் உனக்கு கிளியர் பண்ண பாக்குறேன். இப்போதைக்கு என்கிட்ட எதுவும் கேட்காத. நீ இளந்தென்றலோட ஹஸ்பண்ட் அப்படிங்கற விஷயத்தை மட்டும் அவங்களுக்கு புரியவை"

"ஆனா, நான் கட்டின தாலியை அவ கழட்டிட்டா" என்றான் வேதனையோடு.

"என்ன்னனது? அதை கழட்டி உன்கிட்ட கொடுத்துட்டாங்களா?" என்றான் அதிர்ச்சியோடு பரஞ்ஜோதி.

"இல்ல. என்கிட்ட கொடுக்கவும் இல்ல, போட்டுக்கவும் இல்ல"

"இது நம்பற மாதிரி இல்லையே... நம்ம கல்ச்சரை அவங்க ரொம்ப மதிக்கிறவங்களாச்சே...! அப்படி இருக்கும் போது, எப்படி தாலியை கழட்டி வச்சாங்க?"

"எனக்கும் ஒன்னும் புரியல பரா. இந்தப் பொண்ணு என்னை பைத்தியமாக்காம விடமாட்டா போலிருக்கு..."

"அவங்க ஏற்கனவே உன்ன பைத்தியமாக்கிட்டாங்க அப்படின்னு தான் எனக்கு தோணுது" என்றான் பரஞ்சோதி கிண்டலாய்.

அதைக் கேட்டு சிரித்த மாமல்லன்,

"எனக்காக என் கூட இருக்குறதுக்கு உனக்கு ரொம்ப தேங்க்ஸ் பரா... எல்லாம் சரி... அது எப்படி எல்லாம் தானாவே நடந்த மாதிரி பக்காவா பிளான் பண்ணி செஞ்ச?"

"அது ஒரு நாள்ல போட்ட பிளான் இல்ல. இந்த சந்தர்ப்பத்துக்காக நான் ரொம்ப நாளாவே காத்துகிட்டு இருந்தேன். இளந்தென்றல் எங்கையாவது வெளியில போனா, என்கிட்ட சொல்ல சொல்லி இசக்கி அண்ணன் கிட்ட சொல்லி இருந்தேன். அப்போ தான், அவங்க அப்பாவுக்கு திதி குடுக்க கோவிலுக்கு போகணும்னு அவங்க இசக்கி அண்ணன் கிட்ட விசாரிச்சாங்க. அதிர்ஷ்டவசமா, அன்னைக்கு வேலண்டைன்ஸ்டேவா இருந்தது. இசக்கி அண்ணன் எனக்கு ஃபோன் பண்ணி, அவங்க கோவிலைப் பத்தி விசாரிச்சதா சொன்னாரு. நான் தான், சிட்டிக்கு வெளியில இருக்கிற கோவிலுக்கு அவங்களை அனுப்ப சொன்னேன்"

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Where stories live. Discover now