34 வெப்பக் கடத்தல்

1K 65 12
                                    

33 வெப்பக் கடத்தல்

மாமல்லனின் மனதை, குழப்ப மேகங்கள் சூழ்ந்தன. அவனது உணர்வுகள் குறித்து அவனுக்கே புரியா புதிராக இருந்தது. கண்ணிமைக்காமல் இளந்தென்றலையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனது திடீர் முக மாறுதலை கண்ட இளந்தென்றலும் குழப்பமடைந்தாள். விறு விறுவென அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

தன் மனதில் சந்தேகத்தை துளிர்க்கச் செய்த, இனம் புரியாத தன் உணர்வுகளை பற்றி யோசித்தபடியே இருந்தான் மாமல்லன். எங்கு, எதை தவறவிடுகிறோம் என்று அவனுக்கு புரியவில்லை. அவனது மனம் அமைதி இழந்தது. அவனது இதயம் கணத்து போனது... அது அவனது உடல் முழுவதும் பரவுவது போல் இருந்தது. அந்த வேதனை மிகவும் கொடுமையாக இருந்தது. அது அவனை சிரிக்கவும் செய்தது, அழுகையையும் வர வழைத்தது. தன் கனவில் கண்ட பஞ்சு போன்ற உணர்வை அவனால் ஒதுக்க முடியவில்லை. அது அவனை விடாமல் விரட்டி கொண்டே இருந்தது.

சிறிது நேரத்திற்கு பிறகு, மெல்ல எழுந்து மீண்டும் தன் அறைக்கு வந்தான். உடையை மாற்றிக் கொண்டால் தேவலாம் என்று தோன்றியது அவனுக்கு. குளியலறைக்குச் சென்று சுடுநீரால் உடலை துடைத்து உடைமாற்றிக் கொண்டான். மீண்டும் கட்டிலுக்கு வந்தவன், போர்வையில் வீசிய தைல வாடை பிடிக்காமல், போர்வையை மாற்ற எண்ணி அதைப் பிடித்து இழுத்தான். அப்பொழுது அவனது கட்டிலின் மூலையில் இருந்த ஒன்று அவனது கருத்தை கவர்ந்தது. அதை எட்டி எடுத்தவன், அது ஒரு கொலுசு என்பதை புரிந்து கொண்டு  பிரமிப்படைந்தான். கொலுசா? அன்று காலை, இளந்தென்றலின் கொலுசு அவள் காலில் இல்லாமல் இருந்தது அவன் நினைவுக்கு வந்தது. ஆனால், இது அவனது படுக்கையில் எப்படி வந்தது? ஒருவேளை, நேற்று இரவு அவள் அவனை கவனித்துக் கொண்டிருந்த பொழுது தவறி விழுந்திருக்குமோ? ஆனால் அவள் சோபாவில் தானே உறங்கிக் கொண்டிருந்தாள்? அவன் மேலும் குழம்பி, அந்த கொலுசையே உற்றுப் பார்த்தபடி இருந்தான். 

மெல்லிய புன்னகை அவன் இதழோரம் இழையோடியது. இளந்தென்றலின் காலை சதா வருடிக் கொண்டிருந்த அந்த கொலுசால் தன் கன்னத்தை மெல்ல வருடினான். மீண்டும் அதை ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான். அதை இளந்தென்றலிடம் கொடுக்கவும் இல்லை, அதைப் பற்றிய அவளிடம் கூறவும் இல்லை.

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Tahanan ng mga kuwento. Tumuklas ngayon