49 திருமதி மாமல்லன்

Start from the beginning
                                    

"நெஜமாத் தான் சொல்றியா?"

"நிஜமா தான் சொல்றேன்"

"நான் அதை மனசுல வச்சிக்கிறேன்"
என்று, காவியாவை கண்காணிக்க துவங்கினார் சாரா.

......

நமது கல்யாணப் பெண், விடிவெள்ளியை போல் ஜொலித்துக் கொண்டிருந்தாள். அது அவளது வாழ்வின் மிகப்பெரிய நாள். அவள் இன்று, சட்டப்படி திருமதி இளந்தென்றல் மாமல்லன் ஆகப்போகிறாள். மாமல்லனை பற்றி காவியாவிடம் விசாரித்த பொழுது, அவன் இன்னும் திருமண மண்டபத்திற்கு வந்து சேரவில்லை என்று தெரிந்து கொண்டாள்.

அவனுடைய பெயர், அவளது கைபேசியில் ஒளிர்ந்த போது, அதைவிட பிரகாசமாய், அவள் முகம் ஒளிர்ந்தது. உடனே அந்த அழைப்பை ஏற்றாள்.

"ஏன் இன்னும் நீங்க மண்டபத்துக்கு வரல?"

அப்பொழுது, விமான நிலையத்தில் ஒளிபரப்பப்படும் பயணிகளுக்கான அறிக்கை அவள் காதில் விழுந்தது.

"நீங்க எங்க இருக்கீங்க?" என்றாள் குழப்பத்துடன்.

"ஏர்போர்ட்ல"

"ஏர்போர்ட்லயா? உங்களோட ஃபிரண்ட் யாராவது கல்யாணத்துக்கு வராங்களா?"

"நான் தான் லண்டனுக்கு போறேன்"

"என்னது? லண்டனுக்கு போறீங்களா? இன்னிக்கு நம்ம கல்யாணம்ங்க" என்றாள் அதிர்ச்சியுடன்.

"ஐ அம் சாரி தென்றல். எனக்கு வேண்டியது எனக்கு கிடைச்ச பிறகும், உன்னை கல்யாணம் பண்ணிக்க நான் என்ன முட்டாளா?"

"நீங்க என்ன சொல்றீங்க?"

"உன்னை அடைஞ்சதுக்கு பிறகு, உன்னை நான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு நினைக்கிறாயா? உன்னை மாதிரி பொண்ணுங்க எல்லாம் கல்யாணம் அப்படிங்கற ஒரே ஒரு விஷயத்துக்கு தான் கட்டுப்படுறீங்க. அதனால தான் உன்னை அடைய, அந்த வழியை நான் தேர்ந்தெடுத்தேன். பரவாயில்ல நீ என்னை ஏமாத்தல... நானே எதிர்பார்க்காத வகையில் கல்யாணத்துக்கு முன்னாடியே நீ என்கிட்ட வந்துட்ட..."

"இங்க பாருங்க, இதெல்லாம் விளையாடற விஷயம் இல்ல. தயவுசெய்து கிண்டலை நிறுத்துங்க" என்று பொங்கி வந்த கண்ணீரை விழுங்கினாள்.

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Where stories live. Discover now