48 நினைவுகள்

Start from the beginning
                                    

"நீங்க என்னை சீக்கிரமா போக சொன்னதால வந்த வினையை பாத்தீங்களா? இதுக்கு பதில், நான் இன்னும் கொஞ்ச நேரம் உங்க வீட்ல இருந்துட்டு வந்திருக்கலாம்..." என்றாள் இளந்தென்றல்.

"அதுக்கு பதிலா, நீ அங்கிருந்து ஓடிப் போகாம, கொஞ்ச நேரம் எனக்காக காத்திருந்திருக்கலாம்" என்றான் மாமல்லன்.

"அப்படி செஞ்சிருந்தா ஷீலா மாட்டியிருக்க மாட்டாங்க இல்ல?"

"மாட்டா*ங்க* வா? இன்னும் நீ அவளுக்கு மரியாதை கொடுக்கிறியா?"

ரியர் வியூ கண்ணாடியின் வழியாக பரஞ்சோதியை பார்த்த மாமல்லன்,

"நான் சொல்லல?" என்றான்.

"என்ன சொன்னீங்க?" என்றாள் தென்றல்.

"நீ ரொம்ம்ம்ம்ம்ப நல்லவன்னு சொன்னேன்" என்று சிரித்தான்.

உதடு சுழித்து அவனை ஒரு அடி போட்டாள் தென்றல். தன் வருங்கால மனைவியிடம், *மா*மல்லன் அடிபடுவதை பார்த்து சிரித்தான் பரஞ்ஜோதி.

பரஞ்சோதியும், இளந்தென்றலும், மாமல்லனை அவனது வீட்டில் விட்டு விட்டு, காவியாவின் வீட்டை நோக்கி கிளம்பினார்கள். யாருமற்ற ஒரு குறுகிய சந்தில் அவர்களுக்காக காத்திருந்தாள் காவியா, யாரும் அவர்களை பார்க்கக் கூடாது என்பதற்காக. இளந்தென்றலுடன் பின் இருக்கையில் அமர்ந்து கொண்ட காவியா,

"இன்னைக்கு, உன்னோட நாள் மல்லன் அண்ணனோட எப்படி போச்சி?" என்றாள்.

"அவரோட நல்லா தான் போச்சி. ஆனா..."

"ஆனா என்ன?"

நடந்ததை அவளிடம் கூறினாள்
இளந்தென்றல்.

"அடக்கடவுளே, இப்படிப்பட்ட பொம்பளைங்க கூடவா இருக்காங்க? இல்லாத விஷயத்தை, டிவி சீரியல்ல ஓவரா காமிக்கிறாங்கன்னு நினைச்சேன். உனக்கு ஏதாவது ஆகி இருந்தா என்ன பண்றது தென்றல்? பாட்டிக்கு நான் என்ன பதில் சொல்லி இருப்பேன்? ஏன் இவ்வளவு கேர்லெஸா இருக்க?"

"சாரி காவியா"

"போடி, நீயும் உன் சாரியும்..."

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Where stories live. Discover now