44 காதம்பரியின் மகன்

ابدأ من البداية
                                    

 உன் அம்மா
 கதம்பரி

அந்த புகைப்படத்தை பார்த்தவுடன், கோதையின் கண்களில் நீர் கட்டியது. அது அவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது எடுத்துக்கொண்டது. நிற்கவே தடுமாறிய அவரை, அமர வைத்தான் மாமல்லன்.

"நான் போன முறை மதுரைக்கு வந்த போது, இளந்தென்றலை முதல் தடவை பார்த்தேன். அப்பவே எனக்கு அவளை ரொம்ப பிடிச்சி போச்சி. ஆனா, அவளுக்கு என்னை பிடிக்கல. அவளுக்கு ஏற்கனவே நிச்சயமா ஆயிடுச்சின்னு எனக்கு தெரிஞ்சது. அவளோட முடிவுல அவ ரொம்ப பிடிவாதமா இருந்தா. ஆனா, என்னால அதை ஏத்துக்கவே முடியல. ஏன்னா, அவளுக்கும் எனக்கும் நடுவுல ஏதோ ஒரு தொடர்பு இருந்ததை நான் உணர்ந்தேன். அவளோட மனசை மாத்த முடிவு பண்ணேன். அதுக்கு எனக்கு ஒரு சந்தர்ப்பம் தேவைப்பட்டது. ஒரு சந்தர்ப்பம் கிடைச்சா என்னுடைய காதலை அவளுக்கு புரிய வச்சிட முடியும்னு நான் நம்பினேன். அப்போ தான், உங்க டிரீட்மென்ட்க்கு அவளுக்கு பணம் தேவைப்படுதுன்னு தெரிஞ்சுகிட்டேன். அதை எனக்கு சாதகமாக நான் பயன்படுத்திக்கிட்டேன். வேற ஒருத்தர் மூலமா, அவளுக்கே தெரியாம, சென்னையில வேலை இருக்கிறதா அவளுக்கு தெரிய வச்சேன். அவ ரொம்ப சந்தோஷமா அதை ஒத்துக்கிட்டா. ஆனா, சென்னைக்கு வந்ததுக்கு பிறகு, அவ என் வீட்ல தங்க தயாரா இல்ல.  உங்க ஆபரேஷனுக்கு நான் ஏற்கனவே செலவழிச்ச பணத்தை காரணம் காட்டி, அவளை அங்க தங்க வச்சேன். என்னுடைய வசதியை பார்த்து அவளுடைய மனசு மாறும்னு எதிர்பார்த்தேன். ஆனா அது  கடைசி வரைக்கும் நடக்கல. ரெண்டு நாளைக்கு முன்னாடி தான், என்னோட ஆட்கள் மூலமா, அவளுக்காக பார்த்து வெச்சிருக்கிற மாப்பிள்ளை வேற யாரும் இல்ல நான் தான் எனக்கு தெரிய வந்தது. எங்க அம்மாவுடைய ரூமை சல்லடை போட்டு சலிச்சு பார்த்தேன். ஏன்னா, தென்றல் அவங்களுக்கு மருமகளா வரணும்னு அம்மா விரும்பியிருந்தா, நிச்சயம் அது சம்பந்தமா ஏதாவது ஒரு க்ளுவை எனக்கு விட்டுட்டு போயிருப்பாங்கனு நான் நினைச்சேன். அவங்க என்னை ஏமாத்தல. அவங்களுடைய லெட்டர் எனக்கு கிடைச்சது. அதைப்பத்தி தென்றல் கிட்ட நான் எதுவும் சொல்லல. ஏன்னா, அவ என்னை நம்ப மாட்டான்னு எனக்கு தெரியும். அதனால தான், அவ மதுரைக்கு வந்து சேர்றதுக்கு முன்னாடியே, நான் இங்க வந்து உங்களை பார்த்து பேசிட்டு போனேன். அவளை நான் பொண்ணு பார்க்க வந்த போது, அவ முகத்துல தெரிஞ்ச அதிர்ச்சியை நீங்களே பாத்திங்களே... இன்னும் கூட இந்த கல்யாணத்துல முழு ஈடுபாட்டையும் அவ காட்டலன்னு நீங்க பார்த்துக்கிட்டு தானே இருக்கீங்க..." என்று இளந்தென்றலை பார்த்தான் மாமல்லன். அவன் நிரூபிக்க நினைப்பது என்ன என்பதை புரிந்து கொண்டாள் இளந்தென்றல்.

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️حيث تعيش القصص. اكتشف الآن