40 உளவாளி

Start from the beginning
                                    

புன்னகைத்த மாமல்லன்,

"நான் விருப்பப்பட்டு ஆஃபீஸ் போறேன்னு நினைக்கிறியா? ஜுரம் வந்ததால நிறைய லீவு எடுத்துட்டேன். இங்க இருக்கிற வேலைகளை முடிச்சா தான் என்னால மதுரைக்கு வர முடியும்..." என்றான்.

ஆம் என்று தலையாசைத்தாள்.

"டேக் கேர்... ஐ லவ் யூ..."

இளந்தென்றல் மென்மையாய் புன்னகைக்க, அலுவலகம் கிளம்பிச் சென்றான் யாழினியன். தனது பொருட்களை எடுத்து வைக்கத் துவங்கினாள் இளந்தென்றல். அவளுக்கு எதுவுமே பிடிக்கவில்லை. அவளுக்கு மதுரைக்கு திரும்பிச் செல்ல கூட பிடிக்கவில்லை. ஏனோ அழுகையாய் வந்தது.

"அந்த அப்பாடக்கர் என்னை வீட்ல தனியா விட்டுட்டு ஆபீசுக்கு கிளம்பி போயிட்டாரு... இவரெல்லாம் என்ன  புருஷன்? நான் முடியாதுன்னு சொன்னப்போ என் பின்னாடி சுத்திக்கிட்டு இருந்தாரு... இப்போ கல்யாணம் ஆனதுக்கு பிறகு, கண்டுக்காம போறாரு. இவரைப் பாக்காம நான் எப்படி மதுரையில இருப்பேன்?" என்று புலம்பிய அவள்,

மாமல்லனின் கைபேசிக்கு அழைப்பு விடுத்தாள். ஆனால் அவனது கைபேசி வாய்ஸ் மெயிலில் இருந்தது. அவளுக்கு அது எரிச்சலைத் தந்தது. அப்படி என்ன தான் வேலையோ...!

அப்பொழுது அழைப்பு மணியின் சத்தம் கேட்டு, அவள் முகம் மலர்ந்தது. வந்திருப்பது மாமல்லனாகத் தான் இருக்க வேண்டும் என்றெண்ணி கதவை திறக்க ஓடினாள். ஆனால் வந்திருந்தது பரஞ்ஜோதி. அவன் அவளைப் பார்த்து புன்னகைத்தான். வலிய முகத்தில் புன்னகையை வரவழைத்துக் கொண்டாள் இளந்தென்றல்.

"உங்ககிட்ட தான் இன்னொரு சாவி இருக்குமே? அப்புறம் எதுக்கு பெல் அடிச்சீங்க?"

"நீங்க வீட்ல தனியா இருக்கும் போது, நான் எப்படி உங்க பர்மிஷன் இல்லாம உள்ள நுழைய முடியும்? அதனால தான் பெல்லடிச்சேன் என்று சிரித்தான் பரஞ்ஜோதி.

"உள்ள வாங்கண்ணா"

"இதை மல்லன் உங்களுக்காக அரேஞ்ச் பண்ண சொன்னான்" என்று அவளிடம் ஒரு உறையை நீட்டினான்.

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Where stories live. Discover now