35 சிறப்பான போர்வை

Începe de la început
                                    

தனது கைகளைக் கட்டிக் கொண்ட மாமல்லன்,

"நீ என்னை எப்படி கவனிச்சுக்கிட்டேன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?" என்றான்.

தடுமாறிப் போனாள் இளந்தென்றல். அவனிடமிருந்து தப்பிக்க வார்த்தைகளை தேடினாள்.

"நான் உன்கிட்ட ஏதோ கேட்டேன், தென்றல்"

"உங்க கையிலயும், கால்லையும் தைலம் தேச்சு விட்டேன்... கம்பளியால உங்களைப் போர்த்தி விட்டேன்" என்றாள் தட்டுத்தடுமாறி.

"எந்த கம்பளி?" என்றான் புருவத்தை உயர்த்தி.

"கபோர்டுல இருந்த கம்பளியால..." என்றாள் அலமாரியை சுட்டிக்காட்டி.

"எனக்கு முன்னாடி பேசவே தடுமாறிக்கிட்டு நிக்குற, இந்த ஸ்பெஷல் கம்பளியை பத்தி ஒன்னுமே சொல்லலையே...???"

அதிர்ச்சியுடன் அவனை ஏறிட்டாள் இளந்தென்றல். தான் கேட்ட கேள்விக்கு அவளிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை மாமல்லனுக்கு. அது அவனை கோபத்தின் உச்சத்திற்கு இட்டுச் சென்றது. அவளது தோள்களைப் பற்றி தன்னை நோக்கி இழுத்த அவன், சிங்கமென கர்ஜித்தான்.

"சொல்லு தென்றல், என்னை சாவுல இருந்து நீ எப்படி காப்பாத்தின? ஏன் தென்றல்? உயிரை விட மேலான விஷயத்தை கொடுத்து என்னை நீ காப்பாத்தினது, தினம் தினம் என்னை கொஞ்சம் கொஞ்சமா கொல்ல தானா? என்னை எதுக்காக இப்படி நரகத்தில் தள்ற? அதை செய்யறதுல உனக்கே விருப்பம் இல்லைன்னு நல்லா தெரியுதே..."

கண்ணீர் ததும்பும் கண்களுடன் அவனை அதிர்ச்சியுடன் ஏறிட்டாள் இளந்தென்றல்.

"என்னை அந்தப் பார்வை பார்க்காத தென்றல். உன் மனசுல நீ எனக்காக என்ன ஃபீல் பண்றேன்னு உன் கண்ணே சொல்லுது... ஏன் இப்படி எல்லாம் செய்ற? எல்லாத்தையும் விட, உனக்கு நான் தான் முக்கியம்னு உனக்கே தோணும் போது, எது என்கிட்ட வர உன்னை தடுக்குது? பேசு தென்றல்..."

தன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள் இளந்தென்றல்.

"அழுறதை நிறுத்து தென்றல். உன்னோட அழுகை, உன்னை என்கிட்ட இருந்து காப்பாத்த போறதில்ல. நீ எனக்கு பதில் சொல்லித்தான் ஆகணும்"

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Unde poveștirile trăiesc. Descoperă acum