27 அதிஷ்டம் அற்றவளா?

Start from the beginning
                                    

"இல்லங்க. நான் நல்லா இருக்கேன். நீங்க உங்க ரூமுக்கு போங்க" என்றாள் அதே தயக்கத்துடன்.

"நான் சொல்றதை புரிஞ்சிக்க முயற்சி பண்ணு, தென்றல். இதெல்லாம் எனக்கு ரொம்ப புதுசு. என்னால இதை சாதாரணமாக எடுத்துக்க முடியல"

"ஆனா, எனக்கு இது ரொம்ப சாதாரணம். இந்த மாதிரி டைம்ல, நான் இவ்வளவு ரிலீஃபா இருக்கிறது இது தான் முதல் தடவை.  நான் இதுக்கு முன்னாடி, இதுக்காகவெல்லாம் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டதே இல்ல. நீங்க பதட்டப் பட்டதை பார்க்கும் போதே தெரிஞ்சுகிட்டேன், இதெல்லாம் உங்களுக்கு ரொம்ப புதுசுன்னு. நான் நல்லா இருக்கேன். நீங்க தைரியமா போங்க. ஏதாவது வேணும்னா, நான் உங்களை கூப்பிடுறேன்."

தன்னிடம், தன்னைப் பற்றி பேசிக் கொண்டிருந்த இளந்தென்றலை அன்பாய் பார்த்துக் கொண்டிருந்தான் மாமல்லன். இது தான் முதல் முறை, அவள் அவனிடம் இவ்வளவு அமைதியாய் பேசுவது.

"சரி, ஆனா, தயவு செய்து கதவை மட்டும் தாழ்பாள் போடாத..."

சரி என்று தலைவசைத்தாள் இளந்தென்றல். அங்கிருந்து சென்றான் மாமல்லன்.

இளந்தென்றலின் கண்கள் ஏனோ கலங்கியது. இதெல்லாம் அவள் எதிர்பாராதது... மிகவும் அரிதானதும் கூட... ஏனென்றால், தான் அனுபவிக்காத வலியை புரிந்து கொள்வது என்பது அவ்வளவு சாதாரணமானதல்ல. இது பெண்கள் சமாச்சாரம். ஆனால், அதை ஒரு ஆண்மகன் புரிந்து கொள்ளும் போது, அது புது பரிணாமத்தை அடைகிறது. இன்று அவள் மாமல்லனிடம் கண்டதெல்லாம், தூய்மையான அன்பு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதை அடையும் அதிர்ஷ்டம் தனக்கு இல்லாமல் போனதே என்று முதல் முதலாய் வருத்தப்பட்டாள் இளந்தென்றல்.

சாரா இல்லம்

அவசரமாய் உள்ளே நுழைந்த பரஞ்சோதி, சாரா தனக்காக காத்திருப்பதை கண்டான்.

"என்ன விஷயம்னு சொல்லுங்க" என்றான்.

"மாமல்லனுக்கும் இளந்தென்றலுக்கும் நடுவுல, என்ன உறவு இருக்குன்னு முதல்ல நீ எனக்கு சொல்லு"

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Where stories live. Discover now