25 எதிர்பாராத சுவாரஸ்யம்

Bắt đầu từ đầu
                                    

"ஷீலா, உங்களோட டிரான்ஸ்ஃபர் ஆர்டரை குடுங்க"

"ஏன் அதை திருப்பி கேட்கிறீங்க? மல்லன் சார் அதை கேன்சல் பண்ணிட்டாரா?" என்றாள் ஆர்வமாக.

"ஆமாம். மல்லன் அதை கேன்சல் தான் பண்ணிட்டான்" என்று அவன் கூறியவுடன் ஷீலாவின் முகம் பிரகாசித்தது.

"அதுக்கு பதிலா, வேற ஒரு ஆர்டரை கொடுத்திருக்கான்"

அவளிடம் ஒரு உரையை நீட்டினான். அந்த உரையை அவசரமாய் பிரித்து, அதிலிருந்த கடிதத்தை படித்தாள் ஷீலா. அவளது முகம் இருண்டு போனது. அது அவளை வேலையை விட்டு தூக்கி விட்டதற்கான ஆணை. அவளுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது.

"என்ன பரஞ்ஜோதி இது? எதுக்காக மல்லன் இப்படி எல்லாம் செய்றாரு? அவருக்கு உண்மையா உழைச்ச ஒர்க்கருக்கு அவர் காட்ற நன்றி இது தானா?" சீறினாள் ஷீலா.

"தன்னோட ஒர்க்கரை எப்படி நடத்தணும்னு மல்லனுக்கு  யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்ல. அது அவனுக்கு நல்லாவே தெரியும்"

" சரியான காரணத்தை சொல்ற வரைக்கும் நான் இந்த வேலையை விட்டு போக மாட்டேன்" என்றாள் கோபம் குறையாமல்.

"சினம் கொண்ட சிங்கத்தை சீண்டி பாக்காதே ஷீலா. உன்னோட நல்ல நேரம், இந்த விஷயத்தை மல்லனே நேரடியா ஹேண்டில் பண்ணாம, என் மூலமா பண்றான். உன் மரியாதை முழுசா கெட்டு போறதுக்கு முன்னாடி இங்கிருந்து கிளம்பு" என்றான் பரஞ்சோதி சிறிதும் அலட்டிக் கொள்ளாமல்.

தனது கைப்பையை எடுத்துக் கொண்டு, விடுவிடுவென கதவை நோக்கி நடந்தாள் ஷீலா.

"பை தி வே... எங்க வேலையை நீ ரொம்ப சுலபமாகிட்ட" என்ற பரஞ்சோதியை குழப்பத்துடன் ஏறிட்டாள் ஷீலா.

"மல்லனோட பாட்டிக்கு, இளந்தென்றலை ரொம்ப பிடிச்சிடுச்சு. ஏன்னு தெரியுமா?"

பதில் கூறாமல் மென்று விழுங்கினாள் ஷீலா.

"இளந்தென்றல், மத்த பொண்ணுங்களை மாதிரி அரைகுறை உடை உடுத்திக்கிட்டு, தலைகனம் பிடிச்சு அலையாம இருந்தது தான் காரணம். பாட்டியை மல்லைக்கு வரவச்சதுக்கு ரொம்ப தேங்க்ஸ்" என்று அவன் நமுட்டு சிரிப்பு சிரிக்க, திகில் அடைந்த முகத்துடன் அங்கிருந்து கிளம்பினாள் ஷீலா.

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ