23 வேலைக்காரி

Začít od začátku
                                    

"அவர் ரொம்ப கோவக்காரரோ?"

"அப்படி இல்ல.... ஆனா அப்படித் தான்..." என்றாள் முகத்தை சுருக்கி.

"நீ என்னை குழப்புற"

"நானே குழப்பத்தில் தானே இருக்கேன்...! அவரு நல்லவரா கெட்டவரான்னு எனக்கே தெரியாதப்போ, நான் என்ன சொல்ல?"

"நீ சொன்ன, அவருக்கு சும்மாவே கோபம் வரும்னு... ஆனா அவரைப் பத்தி இவ்வளவு சாதாரணமா, சத்தமா பேசிக்கிட்டு இருக்கியே, அவர் நீ பேசுறதை கேட்டா, கோபப்பட்டு  உன்னை இந்த வீட்டை விட்டு வெளிய அனுப்பிட மாட்டாரா?"

"தாராளமா அவர் கேட்கட்டும்... நானும், அவர் என்னை இங்கிருந்து அனுப்பிட மாட்டாரான்னு தான் காத்துகிட்டு இருக்கேன்... ஆனா, அவர் அதை செய்ய மாட்டேங்கிறாரே " என்றாள் அலுப்புடன்.

"ஏன்? உனக்கு இங்க இருக்க பிடிக்கலயா?"

"அதை பத்தி எல்லாம் கேட்காதீங்க... அது ரொம்ப பெரிய கதை"

"அதைக் கேட்க என்கிட்ட நிறைய நேரம் இருக்கு"

லேசாய் சிரித்து விட்டு, அங்கிருந்து செல்ல முயன்ற இளந்தென்றல், அவர் ஒரு கேள்வி கேட்க, நின்றாள்.

"நீ யாரு?"

"நானா? நான் இளந்தென்றல்"

"இளந்தென்றல், உனக்கும் மல்லனுக்கும் என்ன சம்பந்தம்?"

"என்னவா வேணும்னாலும் இருக்கட்டும்... அதைப்பத்தி நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் இருக்கிறதா எனக்கு தோணல. வெளி ஆளுங்க கிட்ட என்னால எதையும் பகிர்ந்துக்க முடியாது" என்றாள் தயக்கத்துடன்.

"அப்படின்னா, நீ எல்லாத்தையும் அவர் கூட மட்டும் தான் பகிர்ந்துக்குவியா?"

இளந்தென்றல் அவருக்கு பதில் கூறும் முன், மாமல்லனின் குரலை கேட்டார்கள் அவர்கள்.

"பாட்டி..."

அதைக் கேட்ட இளந்தென்றலின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன.

"பாட்டியா?" என்று பயத்துடன் நகத்தைக் கடித்துக் கொண்டு முணுமுணுத்தாள்.

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Kde žijí příběhy. Začni objevovat