21 'வீடு', 'இல்லம்' ஆனது

Start from the beginning
                                    

"என்ன கேக்குறீங்க நீங்க?" என்றாள் குழப்பத்துடன்.

"எது உன்னை இங்க திரும்பி வர வச்சதுன்னு கேட்கிறேன்"

"நீங்க என்னை ஒரேடியா அனுப்பி வச்சதை நான் கவனிக்க தவறிட்டேனோ?" என்றாள் கிண்டலாய்.

"நான் அந்த அர்த்தத்தில் கேட்கலைன்னு உனக்கு நல்லாவே தெரியும்"

"எனக்கு ஒரு வாரம் தானே லீவ் கொடுத்திருந்தீங்க? லீவ் முடிஞ்சதும் திரும்பி வந்தேன்"

"ஆனா, நீ இங்க திரும்பி வராம இருந்திருக்கலாமே..."

"அப்படிப்பட்ட எண்ணமே என் மனசுல இல்ல"

"ஏன்? பயந்துட்டியா?"

"பயமா? எனக்கா? நான் ஏன் பயப்படனும்? நான் என்ன தப்பு செஞ்சேன் பயப்படுறதுக்கு?"

"என்னோட பவரை பாத்து நீ பயந்துட்ட தானே?" வேண்டுமென்றே அவள் வாயை பிடுங்கி, பேச்சை வளர்த்தினான் மாமல்லன்.

கோபத்தில் பல்லை கடித்தாள் இளந்தென்றல்.

"என்னை பயமுறுத்த உங்க பவர் எல்லாம் பத்தாது. இளந்தென்றல் கடவுளுக்கு மட்டும் தான் பயப்படுவா. எனக்குன்னு ஒரு கட்டுப்பாடு இருக்கு. நான் கோழையும் இல்ல, ஏமாத்துக்காரியும் இல்ல. நன்றி மறவாமையை  சொல்லிக் கொடுத்து வளர்க்கப்பட்டவள் நான். நான் இங்க இருக்கணும்னு தானே, நீங்க எங்களுக்கு இவ்வளவு வசதியையும் செஞ்சுக்கிட்டு இருக்கீங்க? அப்படியே இருக்கட்டும்... என்னை பொறுத்த வரைக்கும், நான் இங்க தங்கறதால எதுவுமே மாறிடாது." என்றாள் இளந்தென்றல் உண்மை அறியாமல்.

அவள் அங்கு தங்கினால் மட்டும் தான் அனைத்தும் மாறும் என்பது அவளுக்கு எப்படி தெரியும்? இதற்குப் பிறகு, அவள் எப்பொழுதும் அவனுடன் தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்பட்ட விதி. 'எதுவுமே மாறாது' என்று நினைத்துக் கொண்டிருக்கும, அவளுடைய 'ஒட்டுமொத்த வாழ்க்கையும்' மாறப்போகிறது என்பதை அவள் சீக்கிரமே பார்க்கத் தான் போகிறாள்.

அவள் கூறியதைக் கேட்டு புன்னகைத்தான் மாமல்லன். அவனுக்கு தெரியாதா என்ன அவளைப் பற்றி? அவளிடம் இருந்து அவன் எதிர்பார்த்தது இதைத் தானே...! அவள் தனக்குள் கொண்டிருக்கும் மதிப்பு, வார்த்தைகளில் அடங்காதது. கோபத்தில் கொந்தளித்த அவளை பார்த்து அவனுக்கு சிரிக்க வேண்டும் என்று தோன்றியது. அவன் முக மாறுதலை கண்ட இளந்தென்றல்,

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Where stories live. Discover now