18 நிச்சயதார்த்தம்?

Start from the beginning
                                    

"நான் நல்லாவே ஸ்வீட் சாப்பிடுவேன். சந்தோஷமா இருந்தாலும்... சோகமா இருந்தாலும்..."

"ஒ... அப்படின்னா, இது உங்க அம்மாவுடைய சக்ஸஸ்ஃபுள் ஆபரேஷனை கொண்டாடவா?"

"ஆமாம்... ஒரு நிமிஷம் இருங்க வரேன்"

ஒரு தட்டு நிறைய கேசரியை  எடுத்துச் சென்று பூஜை அறையில் வைத்து விட்டு வந்தாள். பிறகு மற்றும் ஒரு தட்டில், நிறைய கேசரியை வைத்து அதை மாமல்லனிடம்  நீட்டி,

"இது உங்களுக்கு" என்றாள்

அந்த தட்டில் இருந்த கேசரி, அண்ணாச்சி பழ மனத்துடன், நெய் சொட்ட சொட்ட, முந்திரிப் பருப்புடன்  வண்ணமயமாய் காட்சியளித்தது.

அவளைப் பார்த்து புன்னகைத்த மாமல்லன், அதிலிருந்து சிறிதளவு எடுத்து, வாயில் போட்டு சுவைத்து,

"ரொம்ப பிரமாதமா சமைச்சிருக்க" என்றான்.

"அப்படின்னா, நீங்க இன்னும் கொஞ்சம் சாப்பிடலாமே..."

"நீ சமைச்சை ஸ்வீட்டை சாப்பிடுற அளவுக்கு நான் அதிர்ஷ்டம் செய்யல"

"ஏன் அப்படி சொல்றீங்க?" என்றாள் குழப்பமாக.

"ஏன்னா, எனக்கு டயாபடீஸ் இருக்கு"

அதைக் கேட்ட இளந்தென்றல் அதிர்ந்தாள்.

"நான் ஸ்வீட் சாப்பிடக்கூடாது"

"என்ன்ன்னனனது???? நீங்க டயாபட்டிக் பேஷண்டா? அடக்கடவுளே..."

"அதெல்லாம் பெரிய விஷயமே இல்ல"

"ஸ்வீட்டே சாப்பிட முடியாம என்ன வாழ்க்கை இது? நம்முடைய சந்தோஷத்தை கொண்டாடும் போது, அதுல பெரும்பங்கு வகிக்கிறது ஸ்வீட்ஸ் தானே? ஸ்வீட்ஸ் நம்ம வாழ்க்கையோட ஒரு பகுதி இல்லையா? உண்மையிலேயே நீங்க ஸ்வீட் சாப்பிட மாட்டீங்களா? ஸ்வீட் கூட சாப்பிட முடியலைன்னா, உங்க கிட்ட இவ்வளவு பணம் இருந்து என்ன பிரயோஜனம்? ஸ்வீட் இல்லாம,  உங்களோட சந்தோஷத்தை, உங்க மனசுக்கு பிடிச்சவங்களோட எப்படி நீங்க ஷேர் பண்ணிக்குவீங்க? என்னோட வாழ்க்கையை, ஸ்வீட் இல்லாம, என்னால யோசிச்சு கூட பார்க்க முடியாது..."

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Where stories live. Discover now