17 வெறும் காகிதம் தானே?

Start bij het begin
                                    

"சரிங்க பாட்டி" என்ற அவளது குரல் கம்மியது.

"நம்ம ஆஸ்பத்திரியில கட்டின பணத்தைக் கூட நம்ம கிட்டயே திருப்பி கொடுத்துட்டாங்க. அவரே உங்க அம்மாவோட ஆபரேஷனுக்கு தேவையான மொத்த பணத்தையும் கட்டிட்டாராம். அவர் கொடுத்த பணம் அப்படியே தான் இருக்கு. அதனால, அந்த பணத்தை வச்சு, உனக்கு கல்யாணம் பண்ணிடலாம்னு நாங்க யோசிச்சுக்கிட்டு இருக்கோம்"

"ஆனா பாட்டி... "

"இங்க பாரு, நான் நல்ல தனமா சொல்றேன். மறுபடியும், உன்னோட அர்த்தம் இல்லாத பேச்சை ஆரம்பிக்காத. நம்ம ஜோசியர் உன்னோட ஜாதகத்தை பார்த்துட்டு என்ன சொன்னார்னு தெரியுமா?"

எதுவும் கேட்காமல் அமைதியாய் கேட்டாள் இளந்தென்றல்.

"இன்னும் ஆறு மாசத்துல உனக்கு கல்யாணம் நடந்திடுமாம். நீ எதிர்பார்த்து காத்துக்கிட்டு இருக்கிற உன்னோட ராஜகுமாரன், இந்த ஆறு மாசத்துல வந்துடுவான்னு நினைக்கிறியா? பதினைஞ்சு  வருஷமா வராதவன் இனிமேலா வரப்போறான்?"

"அப்படின்னா எங்களுக்கு நடந்த நிச்சயதார்த்தம், உண்மை இல்லைன்னு சொல்றீங்களா?"

"ஆமாம். அது நிச்சயதார்த்தமே இல்ல. அவங்க அம்மா உன் கழுத்துல ஒரு செயினை போட்டு நீ தான் என் மருமகள்னு சொன்னா, அதுக்கு பேர் நிச்சயதார்த்தமா? நீ எதை நிச்சயதார்த்தம்னு சொல்றியோ, அதை பத்தி அவளோட பிள்ளைக்கு தெரியுமா தெரியாதான்னு கூட நமக்கு தெரியல. நம்ம வாழ்க்கையில சில விஷயங்கள் ஏன் நடக்குதுன்னு நம்மால புரிஞ்சுக்க முடியாது. இதெல்லாம் நம்ம முன் ஜென்மத்து கருமமா இருக்கும். அதனால தான், சிலர் நம்ம வாழ்க்கையில வந்துட்டு போறாங்க. இல்லாத ஒரு விஷயத்தை, இருக்கிறதா நினைச்சு உன்னை நீயே குழப்பிக்காத"

"எல்லாமே காரணத்தோட நடக்கிறதா தான் நான் நம்புறேன் பாட்டி"

"உன்ன சொல்லி தப்பு இல்லடி... உங்க அம்மாவையும் அவளுடைய ஃப்ரெண்டையும் சொல்லணும்... இதுக்காக தான், சின்ன பிள்ளைகளுக்கு முன்னாடி பெரிய விஷயங்களை பேச கூடாதுன்னு சொல்லி வச்சாங்க..." என்றார் பாட்டி காட்டமாக.

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Waar verhalen tot leven komen. Ontdek het nu