15 கசப்பான கடந்த காலம்

1K 62 6
                                    

அப்பொழுது, சமையல் அறையிலிருந்து, கையில் ஒரு கிண்ணத்துடன் உணவு மேஜையை நோக்கி வந்தாள் இளந்தென்றல். பரஞ்சோதி அங்கு அமர்ந்திருந்ததை பார்த்து ஒரு நொடி நின்றவள், மீண்டும் தன் பணியை தொடர்ந்தாள், அவனுக்கு எந்த முக்கியத்துவத்தையும் வழங்காமல். அவள் *டோன்ட் கேர்* என்று இருந்ததை பார்த்து புருவம் உயர்த்தினான் பரஞ்சோதி. 

"மாமல்லனுக்கு ஏத்த ஜோடி தான்... ரெண்டு பேரோட வாழ்க்கையும் ரகளையா இருக்க போகுது" என்று உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான் பரஞ்சோதி.

இந்த மனிதனை இதற்கு முன் எங்கோ பார்த்திருக்கிறோமே என்று தோன்றியது இளந்தென்றலுக்கு. ஆம், மதுரையில் பார்த்திருக்கிறாள்... ஐஸ்கிரீம் பார்லரில்... மாமல்லனுடன்... இவன் எப்படி வீட்டிற்குள் வந்தான்? இசக்கி அண்ணனும் சமையல் அறையில் தானே வேலை செய்து கொண்டிருந்தார்...! அழைப்பு மணியின் ஓசை கூட கேட்கவில்லையே.! அவன், அவளை நோக்கி வருவதை உணர்ந்தாள் இளந்தென்றல். அவனை நோக்கி திரும்பினாள்.

"ஹாய் தென்றல்..." 

"நீங்க எப்படி உள்ள வந்தீங்க?" என்றாள்.

"நான் பரஞ்சோதி..." என்று தன்னிடம் இருந்த இன்னொரு சாவியை அவளிடம் காட்டினான்.

"ஓ... அது நீங்க தானா?" என்றாள் புருவம் உயர்த்தி.

"வாவ்... என்னை உங்களுக்கு தெரியுமா?"

"அவர் தான் உங்க பெயரை ஃபோன்ல பேசும் போதெல்லாம் வாய் ஓயாம சொல்லிட்டே இருக்காரே... அப்புறம் கெஸ் பண்றதுல என்ன கஷ்டம்?"

"என்னோட பேரை உங்க முன்னாடி சொல்லிக்கிட்டு இருக்கான்... உங்க பேரை என்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கான்... அவனோட அன்புக்கு பாத்திரமானவங்கன்னு வரும் போது அவன் அப்படித்தான்..." என்றான் அவளது முக பாவத்தை ஊன்றி கவனித்தவாறு.

தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள் இளந்தென்றல்.

"அவன் உங்களை ரொம்ப காதலிக்கிறான்" என்றான் முடிந்தவரை குரலில் அமைதி காட்டி.

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Where stories live. Discover now