11 புது இடம்

Beginne am Anfang
                                    

மாமல்லன் எதையோ ஆழமாய் யோசித்துக் கொண்டிருந்தான். கண்ணை மூடி, பல்லை கடித்த படி நின்றவன், மீண்டும் கண்ணை திறந்து, பரஞ்சோதி எதிர்பாராத விதமாய், அருகில் இருந்த டீ பாயை ஓங்கி குத்தினான். கண்ணாடியால் ஆன அந்த டீப்பாய், உடைந்து நொறுங்கியது. ஓரிரு கண்ணாடி துண்டுகள் அவன் கரத்தை பதம் பார்த்து, அவன் கையில் இருந்து ரத்தம் ஒழுக ஆரம்பித்தது. அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பரஞ்சோதி, அவனை நோக்கி ஓடி வந்தான். கோபத்தில் அவனைப் பிடித்து தள்ளினான்.

"என்ன முட்டாள்தனம் டா இது...? (அவனை மீண்டும் பிடித்து தள்ளினான்) இது தானா நீ? என்னடா பிரச்சனை உனக்கு? உன்னுடைய தைரியம் எல்லாம் எங்க போச்சு? உன்னை மனுஷனாவே மதிக்காத ஒரு பொண்ணுக்காக எதுக்காக உன்னை நீயே காயப்படுத்திக்கிற?"

அதே கோபத்துடன் அவனை நோக்கி திரும்பிய மாமல்லன்,

"நான் இப்படி இருக்கிறதுக்கு அது தான் காரணம். என்னை மனுஷனா கூட மதிக்க மாட்டேங்கிறா அவ... இவ்வளவு பெரிய கோடீஸ்வரனா இருந்து என்னடா பிரயோஜனம்? என்னை குப்பை மாதிரி எட்டி உதைச்சிட்டாடா அவ... என்னை ஏத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டா டா அவ..."

தன்னை அமைதிப்படுத்திக் கொண்டு,

"உன்னை நீ நம்பலையா மல்லா? உன் மேல இருந்த நம்பிக்கை உனக்கு போயிடுச்சா?" என்றான்.

இரத்தம் தோய்ந்த விழிகளுடன் அவனைப் பார்த்தான் மாமல்லன். அந்த கேள்விக்கு எப்படி பதில் கூறுவது என்று அவனுக்கு புரியவில்லை. தன் மீது இருந்த நம்பிக்கையை அவன் இழந்து விட்டானா?

"அவ, நீ நினைக்கிற மாதிரி இல்ல. இவ்வளவு பிடிவாதமான பொண்ணை நான் பார்த்ததே இல்ல. பணத்தை காகிதம் மாதிரி ட்ரீட் பண்றடா அவ..."

"அவங்களுக்கு பணம் பெருசா தெரியலன்னா என்ன இப்போ? எல்லாருக்கும் நிச்சயம் ஒரு பலவீனம் இருக்கும். இளந்தென்றலுக்கும் நிச்சயம் இருக்கும். கொஞ்சம் அமைதியா இரு. அப்போ தான் உன்னோட மூளை வேலை செய்யும். அவங்க நினைப்புல, நீ உன்னை முழுசா இழந்துட்ட. அதனால தான், உன்னால எதையும் தெளிவா யோசிக்க முடியல. நம்பிக்கையை விட்டுடாத.  நீ அவங்களை நிச்சயம் இழக்க மாட்ட... பரஞ்சோதி உயிரோடு இருக்கிற வரைக்கும்..." என்றான் உறுதியாக.

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Wo Geschichten leben. Entdecke jetzt