9 மனம் உடைந்த மாமல்லன்

En başından başla
                                    

அதற்கு மேல் தாமதிக்க விரும்பாமல், அவனை நோக்கி சென்றான் பரஞ்சோதி. அவனை பார்த்தவுடன், அவனை கட்டிப்பிடித்துக் கொண்டு கண்ணீர் சிந்தினான் மாமல்லன். தனது நண்பனின் துயரை துடைக்க முடியாமல் நிற்கும் தன்னை, கையாலாகாதவனாய் எண்ணினான்  பரஞ்சோதி. மாமல்லனை இருக்கமாய் அணைத்துக் கொண்டான். அவனது அணைப்பிலிருந்து வெளியே வந்த மாமல்லன்,

"தென்றலுக்கு நிச்சயம் பண்ணவன் எவனாயிருந்தாலும் சரி, அவனை கொல்லனும் டா" என்றான் மாமல்லன்.

தென்றலை அடைவதற்காக, ஒருவனை கொல்லக்கூட தயாராக இருக்கிறான் மாமல்லன் என்பது, பரஞ்ஜோதி கனவிலும் எதிர்பார்க்காத ஒன்று. அதை மாமல்லன் ஒருவேளை கோபத்தில் கூறி இருக்கலாம்... எதுவாக இருந்தாலும் சரி, முதலில் அவன் கோபம் குறையட்டும். அல்லது, அவனது கோபத்தை குறைக்க தன்னால் ஏதாவது செய்ய முடிகிறதா என்பதை பார்க்கலாம் என்றென்றினான் பரஞ்சோதி.

"அதை என்கிட்ட விடு. அவனை இந்த உலகத்தை விட்டு நான் அனுப்புறேன்..."

பரஞ்சோதிக்கு தெரியும் அது அவ்வளவு எளிதாய் நடக்க கூடிய விஷயம் அல்ல. தென்றலுக்கு நிச்சயம் ஆகிவிட்டது என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்ததே தவிர, அவளுடன் நிச்சயம்  செய்து கொண்ட நபரை பற்றி யாருக்குமே சரியான தகவல் தெரியவில்லை. ஏனென்றால், அந்த நிச்சயதார்த்தம் இரண்டு குடும்பங்களுக்கு இடையில் மட்டுமே நடந்ததாய் கூறப்படுகிறது. அதைப் பற்றி மாமல்லனிடம் கூறி, அவனது நம்பிக்கையை குலைக்க விரும்பவில்லை பரஞ்சோதி. ஏனென்றால், இப்பொழுது எதையும் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை மாமல்லன். பரஞ்சோதிக்கு இருந்த ஒரே தைரியம், நடந்தது வெறும் நிச்சயதார்த்தம் மட்டும் தான் என்பது தான். தன் மனதில் தனக்கான சபதத்தை எடுத்துக் கொண்டான் பரஞ்சோதி, எப்பாடுபட்டாவது, தென்றலை மாமல்லனுக்கு மண முடிப்பது என்பது தான் அது... எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் சரி... எவ்வளவு பேர் எதிர்த்து நின்றாலும் சரி... தென்றலுக்கே அதில் விருப்பம் இல்லாவிட்டாலும் சரி... அவன் அதை செய்து முடிப்பான்.

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin