7 பிடித்திருக்கிறது

Start from the beginning
                                    

"நீ எங்க தொலைஞ்சு போன?" என்று சிரித்தான்.

"ஒருவேளை, இதையெல்லாம் என்கிட்ட வேற யாராவது சொல்லியிருந்தா, நான் நிச்சயம் நம்பியிருக்க மாட்டேன், மல்லா"

"என் வாழ்க்கையில இப்ப நடந்துகிட்டு இருக்கிற எதையும் என்னாலேயே நம்ப முடியல. முதல் நாள் ஒரு பொண்ணோட கேரக்டர் என்னை ரொம்ப கவர்ந்தது. இரண்டாவது நாள், சுயநினைவை இழந்திருந்த ஒரு பெண்ணோட முகத்தைப் பார்த்து, நான் என்னை மறந்தேன். மூணாவது நாள், அந்த ரெண்டு பேரும் ஒருத்தி தான்னு எனக்கு தெரிஞ்சிது. திடீர்னு, எதுக்காக என்னுடைய வாழ்க்கை, ஒரு பொண்ணு போற டிராக்ல டிராவல் பண்ண ஆரம்பிச்சிருக்குன்னு எனக்கு புரியல. நான் என்னையே இழந்துகிட்டு இருக்கேன் பரா" என்று மென்று முழுங்கினான்.

"அதைப் பத்தி நீ என்ன நினைக்கிற? உனக்கு இப்படி இருக்கிறது பிடிச்சிருக்கா, இல்ல, இதை விட்டு வெளியே வரணும்னு நினைக்கிறியா?"

"வெளியில வர்றதா? நிச்சயம் இல்ல... என்னை பலவீனம் ஆக்கிக்கிட்டு இருக்கிற அந்த பொண்ணு மேல எனக்கு ஏன் கோபம் வரலைன்னு எனக்கு புரியல. அவ போற இடம் எல்லாம் போகணும்னு தோணுது... அவளை பாத்துக்கிட்டே இருக்கணும்னு தோணுது... மிச்சமிருக்கிற என்னோட வாழ்க்கையை அவ கூட வாழனும்னு என் இதயம் நினைக்குது..."

"இரு, இரு... இதயமா? ஒரு வழியா, உன்னோட பம்பிங் ஆர்கன், பிளட் சர்குலேஷனைத் தவிர வேறு ஏதோ செய்ய ஆரம்பிச்சிடுச்சி போல இருக்கு" என்றான் கிண்டலாக.

அதைக் கேட்ட மாமல்லன் திகைத்து நின்றான்.

"ஏன்னு தெரியல பரா, அவளை பார்க்கும் போதெல்லாம் என்னுடைய இதயத்துடிப்பு எனக்கே கேக்குது"

"கடைசியா ஒரு பொண்ணு, காதல் கயித்தால சிங்கத்தை கட்டிடா போல இருக்கு..."

"இது தான் காதல்னா... இந்த காதலை நான் ரொம்ப காதலிக்கிறேன்..."

"ஒரு சாதாரண பொண்ணுக்காக, மாமல்லன் ஒரு நாள் உருகுவான்னு நான் நினைச்சு கூட பாக்கல"

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Where stories live. Discover now