5 நாம் சந்தித்து விட்டோம்

Start from the beginning
                                    

அவன் கூறிய *தூக்கிக்கிட்டு* என்ற வார்த்தை அவளை மென்று முழுங்க செய்தது. அவளுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் தான் அவன் அதை செய்தான். ஆனால் அவனே அதை அவளிடம் கூறிய போது அது அவளுக்கு சங்கடத்தை தந்தது.

"என் முகத்துல  தண்ணி தெளிச்சிங்களா?"

"ஆமாம்..."

"நீங்க என்னை தண்ணி குடிக்க வச்சிருக்க மாட்டீங்க... அதான் எனக்கு மயக்கம் தெளியல..."

அவள் மறுபடி மறுபடி சுற்றி சுற்றி அதே இடத்திற்கு வந்ததை பார்த்த போது, அவனுக்கு விசித்திரமாய் இருந்தது. உண்மையிலேயே அவள் விரதம் இருந்திருப்பாளோ? அவன் அவளுக்கு தண்ணீர் புகட்டினானா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள முயற்சிக்கிறாளோ? அவனுக்கு சிரிக்க வேண்டும் என்று தோன்றியது. அதற்கு மேல், அவன் ஆமாம் என்று கூறும் போது, அவள் முகம் போகும் போக்கை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அன்று, அவன் அதை செய்த போது, அவளை மறுபடியும் பார்க்கவோ, அவளிடம் உண்மையை கூறவோ வேண்டுமென்று அவன் விரும்பவில்லை. ஆனால் இன்று, நான் தான் உனது விரதத்தை முடித்து வைத்தேன் என்று கூற விரும்பினான் அவன். அவள் தனக்காக விரதம் இருக்கவில்லை என்று தெரிந்திருந்த போதும் அவனுக்கு சந்தோஷமாக இருந்தது.

காரை சாலையின் ஓரமாய் நிறுத்திவிட்டு, தன்னை சீட் பெல்ட்டில் இருந்து விடுவித்து கொண்டு, அவளை நோக்கி திரும்பினான்.

"அப்படி கூட யாராவது செய்வாங்களா? உனக்கு தண்ணி கொடுக்காமலா நான் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய் இருப்பேன்? உனக்கு நான் தண்ணி கொடுத்தேன்" என்றான் அவள் கண்களை உற்று நோக்கியபடி.

தன் பார்வையை வேறு பக்கமாய் திருப்பி கொண்டாள் இளந்தென்றல். கலாச்சாரத்தை பின்பற்றும் குடும்பத்தின் வழிவந்தவளாக இருப்பாள் போலிருக்கிறது. தனக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்று விரதம் இருந்திருப்பாள். முன்பின் தெரியாத ஒருவன் அவள் விரதத்தை முடித்தால், அவளுக்கு பதற்றமாக இருக்காதா? மனதிற்குள் எண்ணியபடி மீண்டும் வண்டியை கிளப்பினான் மாமல்லன்.

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Where stories live. Discover now