1 மாமல்லனும் பரஞ்சோதியும்

Start from the beginning
                                    

"நீ எப்போ டீன் ஏஜ் லவ்வர் மாதிரி பேச ஆரம்பிச்ச? காதல், கன்றாவின்னு எதிலையும் நீ மாட்டிக்கலையே?" என்றான் மாமல்லன் வேடிக்கையாக.

"காதலா? உன் கூட இருக்கும் போது அந்த பாக்கியம் எல்லாம் எனக்கு கிடைக்குமா?"

"அதுக்காக நீ சந்தோஷம் தான் படணும். உன்னோட பொன்னான நேரத்தை காப்பாத்த ஒரு நண்பன் இருக்கேனே..."

"நீ சொல்றதும் சரி தான். ஒரு பொண்ணோட வாழ்க்கையை பாழாக்க நான் விரும்பல..." என்றான் சோகமாக.

"ஒரு வழியா நீ ரியாலிட்டியை புரிஞ்சுக்கிட்டியே... அதுவரைக்கும் எனக்கு சந்தோஷம் தான்"

தங்களது வழக்கமான சீண்டல்களை முடித்துக் கொண்டு அவர்கள் இருவரும் உள்நாட்டு விமான நிலையம் நோக்கி பயணித்தார்கள். மாமல்லன் மிகப்பெரிய வியாபார சக்கரவர்த்தியாய் இருக்கலாம். ஆனால், அவனை சீண்டவும், தேவைப்பட்டால் அவனை கடிந்து கொள்ளவும் கூட உரிமை பெற்றவன் பரஞ்ஜோதி ஒருவன் தான். மாமல்லன் கூறினால், ஓடும் ரயிலின் முன் யோசிக்காமல் பாய்ந்து விடுவான் பரஞ்ஜோதி. பரஞ்சோதி நீட்டினால், எந்த கோப்பிலும் படித்துப் பார்க்காமல் கையெழுத்திடுவான் மாமல்லன். ஆனால், அவனை அப்படி செய்ய என்றும் விட்டதே இல்லை பரஞ்ஜோதி.

உள்நாட்டு விமானம் மூலம் இருவரும் மதுரை சென்றடைந்தார்கள். மாமல்லனை கண்ட மதுரை கிளை ஊழியர்கள், பம்பரமாய் சுழன்றார்கள். அன்று முழுவதும் மாமல்லனும், பரஞ்சோதியும், அவ்வளவு பரபரப்பாய் இருந்தார்கள், ஒன்றன்பின் ஒன்றான வாடிக்கையாளர்கள் சந்திப்பினால். தங்கள் வேலைகளை முடித்துக் கொண்டு அவர்கள் வீட்டிற்கு கிளம்ப, பின் மாலை பொழுதாகி விட்டது.

காரில்...

"அப்புறம்...?" என்றான் பரஞ்சோதி கிண்டலாய்.

"என்ன அப்புறம்?"

"மிஸ் டிசொசா எப்படி இருக்கா?"

"அவளைப் பத்தி பேசினா உன்னை கொன்னுடுவேன். சச் அண் இரிடேட்டிங் கேரக்டர்..." என்றான் சிடுசிடுப்புடன் மாமல்லன்.

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Where stories live. Discover now