Part 34

1.4K 91 4
                                    

பாகம் 34

பலமான  திட்டத்துடன் அஸ்வின் இல்லத்தில்  நுழைந்தான் தருண். அந்தத் திட்டத்திற்கான ப்ளூ பிரிண்டை, தன் தலைகுள் ஆழமாய் வரைந்து வைத்திருந்தான். இந்த முறை, எந்த தவறும் நடந்து விடக்கூடாது என்பதில் அவன் உறுதியாக இருந்தான். அவனுடைய திட்டம் முழுமையடையும் வரை, அவன் மீது யாருக்கும், எந்த சந்தேகமும் வந்துவிடக்கூடாது என்பதில் அவன் தீர்க்கமாய் இருந்தான்.

தன் கண்ணான பேரப் பிள்ளையை அலங்கோலமாய் பார்த்து, மூச்சடைத்து போய் நின்றார் சுபத்ரா. உயிரற்ற பிணம் போல், தரையில் சரிந்து விழுந்தான் தருண். அருணின் பெயரை சொல்லி அவனை அழைத்தவரே, தருணை நோக்கி ஓடினார் சுபத்ரா. அவரின் மரண ஓலத்தை கேட்டு, அருணுக்கு தூக்கிவாரிப்போட்டது. அவன் கீழ் தளம் நோக்கி விரைந்தான். அங்கு தருண் இருப்பதை பார்த்து முகம் சுளித்தான். வேலைக்கார ராமுவின் உதவியுடன், தருணை தூக்கி சோபாவில் படுக்க வைத்தான் அருண்.

"அருண், டாக்டரை வரச்சொல்லு" என்றார் சுபத்ரா.

 சரி என்று தலையசைத்துவிட்டு டாக்டருக்கு போன் செய்தான் அருண்.

"ராமு, கொஞ்சம் சுடு தண்ணி கொண்டு வா" என்று சுபத்ரா  கட்டளையிட, ராமு சமையலறையை நோக்கி சிட்டாய் பறந்தான்.

"டாக்டர் வராரு" என்று அழைப்பை துண்டித்தான் அருண்.
 
"இவன் டுமாரோ லேண்ட்டுக்கு போயிருக்கிறதா சொன்னியே..." என்றார் அருணை பார்த்து சுபத்ரா.

"அவனுடைய ரூம்ல டுமாரோ லேண்ட் டிக்கெட் பாக்ஸ் இருந்ததை நான் பார்த்தேன். அதனால, அவன் அங்க தான் போயிருப்பான்னு நெனச்சேன்"

"அப்போ நீ எனக்கு கொடுத்த செய்தி, நிச்சயமானது இல்லை அப்படித் தானே?"

அருண் அமைதி காத்தான்.

"என்ன அண்ணன் நீ? பாரு, அவனை எப்படி போட்டு அடிச்சிருக்காங்கன்னு" என்று கண்ணீர் வடித்தார் சுபத்ரா.

"எதுக்காக என் மேல பாய்றீங்க? அவனுடைய வழக்கமான நடத்தையை  வச்சி தான் நான் அதை கணிச்சேன். அதுல என்னுடைய தப்பு என்ன இருக்கு?"

போரிலும் காதலிலும் எதுவும் நியாயமே...(முடிவுற்றது )Where stories live. Discover now