Part 2

2.7K 91 5
                                    

பாகம் 2

அஸ்வின் இல்லம்

நல்ல தோற்றமும், சராசரி உயரமும், கட்டுமஸ்தான உடலும், கோதுமை நிறமும் கொண்ட ஒருவனை, அருண் கடுமையாக குறுக்கு விசாரணை செய்து கொண்டிருந்தான். விசாரிக்கப்பட்டு கொண்டிருக்கும் விஷயத்தை பார்க்கும் பொழுது, அவன் தான் தருணாக இருக்க வேண்டும்.

"ஸ்வேதாவுக்கு என்ன ஆச்சு?" என்றான் அருண்.

தன் முகத்தை மூடிகொண்டு  அழத்தொடங்கினான் தருண்.

"போதும், உன் நடிப்பை நிறுத்து" என்றான் அருண் காட்டமாக.

"நடிப்பா? நானா? உனக்கு தெரியாது... நான் எந்த அளவுக்கு மனசு உடைஞ்சு போய் இருக்கேன்னு. அந்த பொண்ணு செத்துட்டாங்கிறத, என்னால நம்பவே முடியல தெரியுமா?" என்றான் அழுத விழிகளோடு.

"வாய மூடு... எதுக்காக, உனக்கு பிறந்தநாள் இல்லாத ஒரு நாளைக்கு, அந்த பெண்ணை, பிறந்தநாள்னு சொல்லி வரவழைச்ச?"

அதை கேட்ட தருணின் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. அந்த விஷயம் அருணுக்கு எப்படி தெரிந்தது. தருண் தன்னை சுதாகரித்துக் கொண்டான்.

"அய்யய்யோ... இல்ல அருண்... நான் அவளை வரவழைக்கல... அன்னிக்கு அவளுடைய பர்த்டே... அவ தான் என்னை இன்வைட் பண்ணி இருந்தா. உனக்கு யாரோ தப்பபா சொல்லி இருக்காங்க."

"அவளுடைய பிறந்த நாள் அடுத்த மாசம். அதை நான் எஃப்.ஐ.ஆர். காப்பியில பார்த்தேன்... "

"அப்படியா? ஆனா, அது எனக்கு எப்படி தெரியும்? அவ என்னை எதுக்கு கூப்பிட்டான்னு எனக்கு தெரியலையே"

"இங்க பாரு, நான் சொல்றத கவனமா கேளு. நமக்கு மோசமான ஒரு கடந்த காலம் இருந்தது. நம்ம அம்மாவால தான், ருக்மணி அம்மா தற்கொலை பண்ணி இறந்து போயிட்டாங்க. அப்படி இருந்தும், அஸ்வின் நமக்கு ஒரு நல்ல லைஃப் கொடுத்திருக்கான். அதுக்கு நம்ம நன்றியுள்ளவங்களா இருக்கனும். "

"என்னை  நம்பு அருண். நான் எந்த தப்பும் செய்யல. உனக்கு என்னைப் பற்றி தெரியாதா?"

போரிலும் காதலிலும் எதுவும் நியாயமே...(முடிவுற்றது )Where stories live. Discover now