இளையவளோ என் இணை இவளோ✔

By Vaishu1986

35.4K 1.9K 437

கட்டுக்குள் அடங்காமல் தன் மனம் போன போக்கில் வாழும் ஒரு பதின்பருவ இளைஞன், தான் செய்த ஒரு தவறுக்காக சிறுவர் சீ... More

💚 இணை 1
💚 இணை 2
💚 இணை 3
💚 இணை 4
💚 இணை 5
💚 இணை 6
💚 இணை 7
💚 இணை 8
💚 இணை 9
💚 இணை 10
💚 இணை 11
💚 இணை 12
💚 இணை 13
💚 இணை 14
💚 இணை 15
💚 இணை 16
💚 இணை 17
💚 இணை 18
💚 இணை 19
💚 இணை 21
💚 இணை 22
💚 இணை 23
💚 இணை 24
💚 இணை 25
💚 இணை 26
💚 இணை 27
💚 இணை 28
💚 இணை 29
💚 இணை 30
💚 இணை 31
💚 இணை 32
💚 இணை 33
💚 இணை 34
💚 இணை 35
💚 இணை 36
💚 இணை 37
💚 இணை 38
💚 இணை 39
💚 இணை 40

💚 இணை 20

737 48 8
By Vaishu1986

திங்கட்கிழமை காலை எட்டுமணியளவில் சபாபதி தன்னுடைய மாமனார் மாமியாரை
வீட்டின் நடுஹாலில் உட்கார வைத்திருந்தார். இன்று லீவ் போடுகிறேன் என்று ஒரேயடியாக அடம் பிடித்த பவியை செல்வா குண்டு கட்டாக தூக்கிச் சென்று பள்ளியில் விட்டு வந்திருந்தான்.

சபாபதி, செல்வா இருவரிடமும் எந்தவிதமான பதட்டமோ, பயமோ, படபடப்போ இல்லை. அவர்கள் பாட்டில் எழுந்தார்கள், கிளம்பினார்கள், அவர்களுடைய வேலையை பார்த்துக் கொண்டு இருந்தார்கள்! பவி கீழறங்கி வந்து காலை டிபனை முடித்து விட்டு பாலைக் குடித்துக் கொண்டிருந்த போது தான் கல்யாணி சிறு சோம்பலுடன் ப்ரிட்ஜில் இருந்த பால்பாக்கெட்டை தூக்கி அடுப்பில் வைத்திருந்தார். அப்போது தான் சபாபதி கல்யாணியிடம் சென்று

"உங்கட்ட கொஞ்சம் பேசணும்! காஃபி குடிச்சுட்டு சாவகாசமா ஹாலுக்கு வந்து உட்காருங்க!" என்று அவரிடம் சொல்லி விட்டு சென்று ஹாலில் டீவி பார்த்துக் கொண்டு இருந்தார்.

தன்னுடைய தந்தை இப்படி சொன்ன பிறகு தனது பலவருட கொள்கையை உடைத்தெறிந்து விட்டு இன்று முதல்முறையாக பள்ளிக்கு விடுப்பு எடுத்து விடுவது என்ற முடிவில் மறுபடியும் தனது அறைக்கு சென்று தனக்கு இதுவரை பயன்படவே இல்லாத லீவ் லெட்டர் ஃபார்மை நிரப்பி எடுத்துக் கொண்டு தன் தந்தையின் கையெழுத்துக்காக கீழிறங்கி வந்தாள் சாம்பவி.

"டாடி.... இதுல ஒரு ஸைன் பண்ணுங்க!" என்று அவரிடம் கேட்டபடி விடுப்பு விண்ணப்பத்தை நீட்டியவளை ஒருமுறை ஏற இறங்க பார்த்த சபாபதி,

"லீவ் போடுற அளவுக்கு இன்னிக்கு என்னடா விசேஷம்? இன்னிக்கு லீவ் எடுத்தாலும் உனக்கு உன்னோட புல் அட்டென்டென்ஸ் சர்ட்டிஃபிகேட் கிடைக்காது தான?" என்று கேட்டவரிடம்,

"ஆமா...... ஆனா பரவால்ல டாடி!" என்றாள் சாம்பவி சற்றே ஏமாற்றம் நிறைந்த குரலில்.

"அச்சச்சோ.... பரவால்லன்னு சொல்லும் போதே அழுதுடுவ போலிருக்கு! லீவ் போட்டுக்கறத பத்தி நீ இவ்ளோ கவலைப்படுறதுனால டாடியால இந்த ஃபார்ம்ல சைன் பண்ண முடியாதுடா செல்லம்! ஐ'ம் ஸாரி!" என்றவர் அறையில் இருந்த செல்வாவை அழைத்தார்.

சிவபெருமானின் ஏவல் பூதகணங்களுள் ஒரு பூதகணம் போல் அவள் அருகில் வந்து நின்றவன், "இஸ்கூலுக்கு டைமாச்சு! கெளம்பு போவம்!" என்றான்.

"இல்ல செல்வா! நான் இன்னிக்கு லீவ் போட்டுக்கப்......!" என்று சொன்னவளின் பேச்சை இடையில் தடுத்து,

"போறதில்ல..... நீ இன்னிக்கு லீவ் போட்டுக்கப் போறதில்ல! செல்வாவோட கிளம்பி ஸ்கூலுக்குப் போய்ட்டு வா!" என்று உறுதியான குரலில் தன் மகளுக்கு கட்டளை இட்டார் சபாபதி.

கிச்சனுக்குள் நின்று பாலை காய்ச்சுபவருக்கு ஹாலில் நடக்கும் இந்த பேச்சுக்கள் எல்லாம் காதில் கேட்டிருக்கும் தானே? அப்புறம் ஏன் இந்த அம்மம்மா என்ன ஏது என்று ஒப்புக்காவது ஒரு வார்த்தை கூட கேட்க வர மாட்டேன் என்கிறார் என்று எரிச்சலடைந்த சாம்பவி, கோபமும் தவிப்புமாக நின்று கொண்டிருந்த போது ஒரு தோளில் புத்தக மூட்டையுடன் வந்தவன் இன்னொரு தோளுக்கு பாரம் குறைகிறது என்று அவளை ஒரே தூக்காக தூக்கிக் கொண்டு வீட்டிலிருந்து கிளம்பி இருந்தான். அவன் சாம்பவியை அப்படி தூக்கியதை சமையலறை ஜன்னலில் இருந்து பார்த்த கல்யாணி விறுவிறுவென ஹாலுக்கு வந்து தன் மாப்பிள்ளையின் முன்னால் நின்றார்.

"இதென்ன குடும்பம் நடத்துற வீடா என்னது மாப்ள? பவிம்மா வயசென்ன, அந்த பையன் வயசென்னன்னு உங்களுக்கு தெரியும்ல? ரெண்டு பேரயும் இப்டி கட்டிப்பிடிச்சுக்கிட்டு உருளச் சொன்னீங்கன்னா இது எங்க போய் முடியும்? ச்சீச்சீ......!" என்று சொன்ன கல்யாணியை எங்கே வயதையும் உறவையும் பாராமல், ஓங்கி அறைந்து விடுவோமோ என்று நினைத்து விரல்களை இறுக்கமாக மூடிக் கொண்டிருந்தார் சபாபதி.

"உங்களுக்கு மனசாட்சின்னு ஒண்ணு இருக்கா இல்லயா? நாலு எட்டு தூக்கிட்டுப் போறது தான் உங்க பாஷையில கட்டிப் பிடிச்சு
உருள்றதா? இவ்ளோ வருஷம் உங்க கிட்டயா போயி எங்குழந்தைய விட்டு வச்சிருந்தேன்? ஐ'ம் அன் அன்குவாலிஃபைட் பாதர்! லிஸன்..... மிஸஸ் தனசேகரன்
செல்வாவ இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்தவன் நான்! ஸோ, அவனால எம்பொண்ணு வாழ்க்கையில ஏதாவது ப்ரச்சன வந்துச்சுன்னா அதுக்கு நான் பொறுப்பேத்துக்குறேன். இப்ப நாம பேச வேண்டிய விஷயத்த பேசி முடிப்பமா?" என்று கேட்டவரிடம்,

"என்னத்த பேசணும்ங்குறீங்க?" என்று கேட்ட படி அவருக்கு சற்று இடைவெளி விட்டு அமர்ந்து கொண்ட கல்யாணி, தைரியமாக அவர் கண்களைப் பார்த்தே பேசினார்.

"மாப்ள..... வாங்க! என்ன காலையிலயே நீங்களும் கல்யாணியும் ஏதோ முக்கியமா பேசிட்டு இருக்கீங்க? இன்னும் நீங்க வேலைக்கு கிளம்பலையா?" என்று அவருடைய அறையிலிருந்து வந்த தனசேகர் சபாபதியிடம் கேட்டபடி கல்யாணியுடைய அருகில் வந்து அமர்ந்தார்.

"முடிக்க வேண்டிய முக்கியமான வேல ஒண்ணு இருக்கு! அத முடிச்சுட்டு கெளம்ப வேண்டியதுதான்......!" என்றவர் தனசேகரை மாமா என்று அழைக்க பிரியப்படவில்லை.

செல்வா தன்னை திட்டும் வசவுகளில் இருந்து தான் அவருக்கு அந்த வீட்டில் கல்யாணியும், தனசேகரும் பவியை எப்படி ஆட்டி வைக்கிறார்கள், தன் மகள் வாய் திறக்காமலேயே எவ்வளவு இன்னல்களை இந்த வீட்டில் மௌனமாக கடந்து செல்கிறாள் என்பது ஓரளவுக்கு தெரிந்தது சபாபதிக்கு.

இத்தூணூண்டு பொடியன் தானே, இவன் நம்முடைய விஷயத்தில் எங்கே தலையிடப் போகிறான் என்று தனசேகரும், கல்யாணியும் நினைத்ததற்கு மாறாக செல்வா தன்னுடைய துல்லியமான கண்காணிப்பு மற்றும் கணக்கு போடும் திறனால் அந்த வீட்டில் கல்யாணியும் தனசேகரும் செய்யும் வீட்டுச்செலவு, அவர்களுடைய ஊர்சுற்றுதல் செலவு, அவர்கள் வெளியே வாங்கி கொட்டிக் கொள்ளும் செலவு, அவர்கள் எடுத்துக் கொண்டு ஊர்சுற்றும் சபாபதியின் கார் பெட்ரோல் செலவு வரை இவ்வளவு இவ்வளவு ஆகும் என்று போட்டுக் கொடுத்த கணக்கில் பவியின் செலவு என்று அவன் ஒரு ஐநூறு ரூபாயை கூட குறிப்பிடவில்லை.

அதே நேரத்தில் அவனுடைய வருமானம், அவர் அவனுக்கென கொடுக்கும் மாத சம்பளம், பவியும் அவனும் சாப்பிட, அதுபோக வீட்டுச் செலவுக்கென ஆகும் கணக்குகளை பைசா உட்பட அவன் எழுதி நீட்டியிருந்ததை கண்டு மலைத்துப் போனார்.

அப்படியென்றால் அவர்களுக்கு இத்தனை வருடங்களாக அவர் கொடுத்துக் கொண்டிருந்த பணம் முழுதுமே ஒன்று விரயம் செய்யப்பட்டிருகிறது அல்லது ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்று மிக தாமதமாக புரிந்து கொண்டார். பெரியவர்களிடம் இனி குடும்ப செலவுக்கு இருபதாயிரம் தேவைப்படாது என்று எனக்கு தோன்றுகிறது என்று அவர் பேசிய இரண்டே நாளில் அந்தப்பகுதி புரோக்கர் அவருக்கு போன் செய்து பேசிய போது தான் இந்த விஷயத்தில் உடனடியாக ஏதாவது ஒரு முடிவு எடுத்தே ஆக வேண்டும் என்கிற தீர்மானத்திற்கு வந்தார்.

"மாப்ள..... ஏதோ முக்கியமான வேல இருக்குன்னு சொன்னீங்க! அது என்ன வேல மாப்ள?" என்று ஒன்றுமே அறியாத அம்மாஞ்சி போல் கேட்ட தனசேகரிடம்,

"இந்த வீட்ல கீழ இருக்குற போர்ஷன நீங்க யூஸ் பண்ற மாதிரி, மேல இருக்குற ரூம்ஸ்ல நானும், பவியும் தங்கியிருக்கோம் இல்லயா? அதுபோக இது என்னோட வீடு! இந்த வீட்டை என்னோட பெர்மிஷன் இல்லாம வாடகைக்கு விடறதப் பத்தி முடிவு பண்றதுக்கு நீங்க யாரு?" என்று கேட்டவரிடம்,

"அதில்ல மாப்ள.... வந்து!" என்று மெதுவான குரலில் தயங்கிய படி பேசத் தொடங்கினார் தனசேகர்.

"சும்மா கெடங்க பேசாம! எதுக்கெடுத்தாலும் அது வந்து அது வந்துன்னு இழுத்துக்கிட்டு...... மாப்ளயோட பேச்செல்லாம் இன்னிக்கு ஒருமாதிரியா வருது! அவருட்ட நான் பேசுறேன்!" என்று ஒரு அலாரம் கடிகாரத்தை செய்வது போல் தன் கணவரை மண்டையில் தட்டி ஆஃப் செய்த கல்யாணி தன்னுடைய மருமகனிடம்,

"நீங்க என்ன கேட்டீங்க மாப்ள?
இந்த வீட்டை என்னோட பெர்மிஷன் இல்லாம வாடகைக்கு விடறதப் பத்தி முடிவு பண்றதுக்கு நீங்க யாருன்னா? நாங்க தான் வித்யாவோட அம்மாவும், அப்பாவும்...... அப்புறம் என்ன கேட்டீங்க? இவ்ளோ வருஷம் உங்க கிட்டயா போயி எங்குழந்தைய விட்டு வச்சிருந்தேன்னா? ஆமா! எங்க கிட்ட தான் நல்லா பார்த்துக்குங்கன்னு சொல்லி உங்க குழந்தைய விட்டு வச்சுருந்தீங்க! ஒங்க குழந்தைய ரெண்டு வயசுல இருந்து பதினேழு வயசு வரைக்கும் பதினைஞ்சு வருஷம் அவளுக்கு ஆயா வேல பாத்து, பாடிகாட் வேல பாத்து, சாப்பாடு வாங்கிக் குடுத்து, துணி எடுத்துக் குடுத்து, வீட்டுப் பெரியவங்களா இருந்து பாத்து பாத்து கண்ணுக்கு கண்ணா அவள வளத்துருக்கோம்! கொழந்தையில இருந்து அவள தடவிக் குடுத்து நாங்க வளத்து வைக்கணும்! ஆனா உங்களுக்காக வேல பாத்த எங்க செலவுக்கு ஆகுற பணத்த நீங்க இனிமே முழுசா தரமாட்டேன்னு சொல்லுவீங்க......"

"இப்டி நீங்க சொன்னா நாங்க எங்களுக்காக ஆகுற செலவ எப்டி சரிகட்டுறது? அதான் மாடிய வாடகைக்கு விடுவோம்னு முடிவு எடுத்தோம். கீழ தான் எங்க ரூமுக்கு பக்கத்துல ஒரு சின்ன ரூம் இருக்குல்ல? அதுல பவி இருக்கட்டும். நீங்களும் இங்க அப்பப்ப தான வந்துட்டுப் போறீங்க? அதுனால நீங்களும், பவியும் ஒண்ணாவே ஒரே ரூம்ல படுத்துக்கங்க. மாடிக்கு போற பாதைய மட்டும் இடிச்சி வெளிய இருந்து வர்ற மாதிரி வைக்கணும்! அதுக்கு ஒரு ரெண்டு லட்சம் மட்டும் குடுங்க!" என்று கேட்ட கல்யாணியின் பேச்சைக் கேட்டு சாம்பவி அன்று செய்தது போல கைதட்டிக் கொண்டே அங்கு வந்த செல்வா,

"இன்னா ஆயா..... புது வீட்டுக்கு பர்னிச்சரு வாங்கிப் போட எப்டி இந்த ரெண்டு லச்ச ரூபா துட்டு போதும்? கேக்குறதுதா கேக்குற; நம்ம வாத்யாரு தான இவரு? ரவுண்டா அஞ்சு, பத்துன்னு கேக்க வேண்டியதுதான நீ.....?" என்று கல்யாணியிடம் சொன்னான்.

"என்னடா உளறுற.....? என்ன புது வீடு? என்ன பர்னிச்சரு?" என்று திடீரென படபடத்த கல்யாணியிடம் சிறு சிரிப்புடன்,

"ஒஸ்க்ரீனு கீய்ஞ்சு அரஅவர் ஆச்சுமே! வாத்யாருக்கு எப்பவோ அல்லாம் தெரியும்...... ஒரு மனுஷன் அமைதியா இருக்குறாங்கதுகாட்டியும் அவன லூசுன்னு தப்பு கணக்கு போட்ரக்கூடாது ஆயா! கபால்னு ஒரு நாள் கையும் களவுமா பிடிச்சான்னு வச்சுக்க...... உன்னிய சும்மா கிழி.....!" என்று நடிகரின் பாணியில் சொன்னவனை அமைதியாக இருக்குமாறு சொன்ன சபாபதி,

"போதும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் தனசேகர்! தேங்க்ஸ் ஃபார் யுவர் கைண்ட்னெஸ்! என் பணத்துல ஒரு புது ப்ளாட்டே வாங்கிக்கிட்டதும் இல்லாம, விட்டா இன்னும் பத்து வருஷத்துக்கு இங்கயே உட்கார்ந்து எங்கிட்ட பணமும் வாங்கி, வீட்ட வாடகைக்கும் விட்டு சம்பாதிப்பீங்களா..... இன்னும் பதினெட்டு வயசு கூட ஆகல. இந்த பையன பாருங்க! நான் அவனுக்கு சம்பளம்னு குடுத்த பணத்துல இருந்து ஒருபைசாவ தொடாம, அவனே சம்பாதிச்சு, பவிக்கும் அந்த பணத்துல தான் பாதி நேரம் சாப்பாடு போட்டுட்டு இருக்கான்; எங்கையோ இருந்து வந்த அவன் எங்க? பொண்ணு வீட்லயே திருடி திங்குற நீங்க எங்க? இத்தன வருஷமா நீங்க என்னோட குழந்தைய கண்கலங்காம பார்த்துக்கிட்டதுக்கும், அவள தடவிக் குடுத்து வளத்ததுக்கும் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்! உங்க புது ப்ளாட்டை ஒங்க இத்தன வருஷ உழைப்புக்கு நான் குடுக்குற கிப்டா நீங்களே வச்சுக்கங்க! மாசா மாசம் உங்களுக்குப் பத்தாயிரம் பணமும் தர்றேன். அதுவும் நீங்க வித்யாவோட அப்பா, அம்மாங்குற ஒரே காரணத்துக்காக தான்!
பட் இந்த செகண்ட்ல இருந்து உங்களுக்கும், எங்களுக்கும் இருக்குற ரிலேஷன்ஷிப் கட்! இனிமே பவி அவளா உங்கள தேடி வந்தா மட்டும் நீங்க அவள பார்க்கலாம்! அதுவும் அவகிட்ட ஒரு ப்ராப்பர் டிஸ்டென்ஸ் விட்டு நிக்கணும்! மறுபடியும் எங்க ரத்தத்த உறிஞ்சு குடிக்கணும்னு ப்ளான் ஏதாவது போட்டீங்கன்னாவோ, இல்ல பவிய கார்னர் பண்ணி எங்கிட்ட ஏதாவது பணம் கலெக்ட் பண்ண முயற்சி பண்ணுனீங்கன்னாவோ உங்க ப்ளாட்டுக்கான ஸோர்ஸ் ஆஃப் இன்கம் என்னன்னு நான் இன்வெஸ்டிகேட் பண்ண வேண்டியிருக்கும்! மொத்தமுமே என்னோட பணம் தான்னு மறுபடி மறுபடி யோசிக்கும் போது ஒருநேரம் இல்லாட்டி ஒருநேரம் நான் கடுப்பாகி உங்க மேல போலீஸ் கம்ப்ளையிண்ட் பைல் பண்றதுக்கும் வாய்ப்பிருக்கு!" என்று சொன்ன சபாபதியை வெளிப்படையாகவே முறைத்த கல்யாணி,

"நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்ட! பெரியவங்கள இப்டி நடுத்தெருவுல உடுற நீயெல்லாம்......!" என்று சபாபதியை பார்த்து மிதமிஞ்சிய ஆங்காரத்தில் பேசிக் கொண்டிருந்தவரின் கவனம் தரையில் அமர்ந்து கொண்டு நெஞ்சில் அடித்தபடி அழுது கொண்டிருந்த செல்வாவிடம் சென்றது.

"ஒபுருஷன் ஒன்ன விட்டுனு ஓடிப்போவ..... நீ தண்ணிலாரில முட்டிக்கினு தெருல உழுந்து சாவ..... கையும் காலும் இழுத்துனு நீ மொடமா போவ! துன்றதுக்கு சோறில்லாம வயிறு காஞ்சு பட்டினியா போவ!" என்று ஒப்பாரியுடனே கல்யாணிக்கு விதவிதமான சாபமிட்டுக் கொண்டிருந்தவனை "செல்வா!" என்ற சபாபதியின் குரல் அடக்கியது.

"அட நீ கொஞ்சம் சொம்மாயிருய்யா ரூல்ஸூ! எனக்கு ஆத்திரம் அடங்க மாட்டேங்குது! எம்மாநேரமா இன்னாமேரி கேள்வியெல்லாம் கேட்டுனு இருக்குற நீ? ரெண்டும்
எதுனா வாயத் தொறக்குதுகளான்னு பாரு; அட தப்பே செஞ்சிருக்கட்டுமே; அதுக்கோசரமாவது மன்னிச்சுடுங்க மாப்ளனு கேக்குதுகளான்னு பாரு! இதுங்கலா என்னா பெரிசுங்க!" என்று தனசேகரையும், கல்யாணியையும் ஒரு பார்வை பார்த்து விட்டு சபாபதியிடம் இவ்வாறு சொன்னான் செல்வா.

"ம்ப்ச்! தேவையில்லாம பேசாத! யாரும் யார் கிட்டயும் மன்னிப்பு கேக்க எல்லாம் ரெடியா இல்ல! இவங்க சம்பந்தமான ஹெல்ப் எதையும் நீ செய்ய வேண்டாம்! அவங்களே எல்லாத்தையும் பார்த்துப்பாங்க!" என்றவரிடம்,

"என்க்கு இன்னாத்துக்கு இதுங்களுக்கு வேல பாக்குற தலையெழுத்து?" என்று கேட்டு தோள்குலுக்கி விட்டு சென்றான் செல்வா.

தனசேகர், கல்யாணியின் புறம் திரும்பிய சபாபதி அவர்களிடம்,
"உங்களுக்கு ஒன் வீக் டைம்! உங்க வீடும் அல்மோஸ்ட் கம்ப்ளீட் ஆகிட்டதுனால இங்க இருந்து கிளம்புறதுல எந்த பிரச்சனையும் இருக்காதுன்னு நினைக்கிறேன்.
அடுத்த சண்டே காலையில நான் இங்க வரும் போது நீங்க இந்த வீட்ல இருந்து கிளம்பியிருக்கணும்!" என்று சொன்னவர் தன்னுடைய வேலை இங்கே முடிந்தது என்று நினைத்து ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் சற்று தாமதமாக கிளம்பி வேலைக்கு சென்று விட்டார்.

இளையவள் இணை சேர்வாள்!

Continue Reading

You'll Also Like

29K 1.4K 76
நான் விரும்பிடாத இன்பம் நீ ... உனை விரும்பும் துன்பம் நான்...!
13K 348 35
இது முழுக்க முழுக்க காதல் கதை தான் நண்பர்களே படிச்சி பாருங்க உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்
156K 4.3K 45
ஒருவரை ஒருவர் உண்மையாக காதலித்தும், குடும்ப சூழ்நிலையும், விதியும் சேர்ந்து விளையாட இருவரும் எப்படி சேர்வார்கள் ? என்று பொறுத்திருந்து பார்ப்போம். கத...
86K 4.5K 55
அவன் அரச பரம்பரையைச் சேர்ந்தவன். அவளோ, அவனது பாட்டனாரின், வேலைக்காரரின் மகள். அவர்களுக்கிடையில் பிரச்சனையாக இருந்தது வெறும் அந்தஸ்து மட்டும் தானா? அல...