அவள் சிணுங்கிக்கொண்டே முழிக்க, அவனது முகம் மிக அருகில் இருக்க , வியந்து அவனை பார்த்தாள்.அருண் , அவளது மூக்கோடு உரசிக்கொண்டே,"என்னடி இப்படி பார்க்குற ?""ஓ ..ஒன்னுமில்லை..நீங்க எப்படி இங்க ?" என்று நழுவ முயற்சித்தாள். அவளது இடையை பிடித்து இறுக்கி , தன்மேல் விழச்செய்தான். பூக்குவியல் போல விழுந்த மதுவை அணைத்து ,"பொண்டாட்டி .. லவ் யு டி .." என்று அவள் இதழ் அருகில் செல்ல, அவளும் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ,போட்டோவை மறைத்துவிட்டு , அவனது நெற்றியில் வேகமாக முட்டி,"புருஷா..இப்படி நாம ரொமான்ஸ் பண்ணுறதை அத்தை பார்த்தாங்கன்னா அவ்ளோதான் .. நல்லபிள்ளையாய், உன்னோட ரூம்கு போடா .." என்று எழுந்தாள் ..அவன் மீண்டும் அவளை இறுக்கி , "பொண்டாட்டி .. என்னடி நீயே இப்படி சொல்லுற ?" என்று அவளுள் புதைய , அருணை தள்ளிவிட்டு சிரித்துக்கொண்டே ஓட ,அவன் பின்னால் துரத்திக்கொண்டே வந்தான்.
திடீரென்று , மது வளர்மதிமேல் மோதி நிற்க, பின் வந்த அருண் அவனது அம்மாவை பார்த்து சிரித்துக்கொண்டே நகர , வளர்மதி ," மது கொஞ்சமாவது அடக்கஒடுக்கமா இரு . இது என்ன சின்ன பிள்ளைங்கமாறி விளையாடிட்டு இருக்கீங்க. இப்போ உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு .அதை மனசுல வச்சுக்கிட்டு நடந்த நல்லாயிருக்கும் " என்று திட்டிவிட்டு உள்ளே சென்றார் .
அருணிற்கோ இதைக்கேட்டதும் ஷாக் ஆகிவிட்டது.. மது அழுதுகொண்டே உள்ளே செல்ல , அருண் அவனது அம்மாவை தேடி , அவர்களது அறைக்கு சென்று கதவை தட்ட , அவர்கள் உள்ளே இருந்தே , "நான் பண்ணுனது தப்புயில்லை,போய் உன்னோட பொண்டாட்டிக்கு புரியவை .. ஐயர் நேரம் குறிச்சுதரவரைக்கும் அவகிட்ட இருந்து விலகியே இரு ..புரியுதா ? இது என்மேல சத்தியம் .. எனக்கு என்னோட புள்ளை உசிறுதான் முக்கியம் " என்று அழுக தொடங்கினார்..மதுவோ , போனில் அனைத்தும் கேட்டுவிட்டு , "குட் மாமியாரே ..இப்படியே மைண்டைன் பண்ணுங்க" என்று கூறிவிட்டு தனது அறையில் சோகமாக உட்கார்ந்துஇருந்தாள்..
அருண் உள்ளே வந்து அவளுக்கு அருகில் நின்று அவளது கண்ணீரை துடைக்க , அவளோ அவனை இறுக்க அணைத்து அழத்தொடங்கினாள். "அம்மா ஏன் இப்படி பண்ணுறாங்கனு தெரியலாமா..அம்மாக்காக நான் உங்கிட்ட சாரி கேட்டுக்குறேன்"
"டேய் . ச்சீ.. சாரி ல வேண்டாம் ..அம்மா பண்ணுனதுக்கு நீ என்ன பண்ணுவ.. விடு .. இனிமேல் நான் அத்தைக்கு பிடிச்சமாறி நடந்துக்கறேன் ..நீ பீல் பண்ணாத. ஓகே..""சரி டி .. இந்தமாறி புரிஞ்சுக்கற பொண்டாட்டி கிடைக்க குடுத்துவச்சுஇருக்கணும் ""ஆமா ஆமா " என்று நக்கலாக கூறினாள் மது .
இப்படியே சிலநாட்கள் மாமியார் -மருமகள் சண்டை நடந்து கொண்டுஇருக்க , அருணோ என்னசெய்வதென்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருந்தான்..
ஒருநாள் , மது அவனது போட்டோவை தவறுதலாக வெளியே வைக்க ,அருண் கூப்பிட்டான் என்று அவசரமாக வெளியே வந்தாள். கதவை அடைத்துவிட்டு வெளியே வந்தாள். ஆனால் அது அவளது ஆடையில் ஒட்டிக்கொண்டு , அவள் செல்லுமிடம் எல்லாம் கூடவே வந்தது. அருணிடம் பேசிவிட்டு திரும்பும் போது போட்டோ நழுவி அருண் ரூமில் உள்ள பெட் அடியில் தலைகீழாக விழுந்தது.
-----------
Hi Frnds,
First of all, i will say sorry for the late update. My laptop got repaired and today only i got m lap.
Sorry frnds...
Ok now tell me , how was this part ? Will Arun findout the truth? Lets see in upcoming Chapters.
YOU ARE READING
💕 நீயே என் இதயமடி 💕
RomanceHai frnds, Am back with another story................. athai pathi therinjukanumna அறிமுகத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும் ..
💕💕நீயே என் இதயமடி -13💕💕
Start from the beginning
