💕💕நீயே என் இதயமடி-5 💕💕

963 70 97
                                        

( Special part for Arun and Madhu 😘😘💖💞💕....)

அருணும் மதுவும் தத்தமது நினைவில் மூழ்கியிருந்தனர் .. இருவரும் அவர்கள் சந்தித்த நிகழ்வை நினைத்து கொண்டு இருந்தனர் . நாமும் அங்கே சென்று அவர்களது காதல் கதையை காண்போம் ..

ஆறு மாதங்களுக்கு முன் ..

காலை நேரம் அந்த அலுவலகமே பரபரப்பாக இயங்கிகொண்டுஇருந்தது. மேனேஜிங் டைரக்டர் அறையினை மானேஜரை மீண்டும் ஒருமுறை செக் செய்துவிட்டு தனது புதிய முதலாளியை வரவேற்க ரெடியாகினார்.

தனது அழுத்தமான காலடிகள் மூலம் , அவன் வந்ததை உணர்த்த , மேனேஜர் மற்றும் அந்த அலுவலகத்தில் உள்ள அனைவரும் அவனுக்கு வாழ்த்து கூறி அவர்களது வேலையை பார்க்க சென்றனர்.

அவனுக்கு இந்த அலுவலகம் பற்றி அனைத்தும் தெரியும். அதனால் அன்றைய மீட்டிங் நடக்கும் இடத்திற்கு சென்று புதிய ப்ராஜெக்ட் பற்றி நடக்கும் டிஸ்கஷன் -இல் கலந்து கொண்டான். ( வேற யாரு நம்ம ஹீரோ தான் )...

அவனது போன் ஒலிக்க , புதிய நம்பரை பார்த்தவன் அட்டென்ட் செய்யாமல் இருக்க , மீண்டும் மீண்டும் அழைப்பு வந்தது.. யாரது என்று கடுப்புடன் எடுக்க , அவன் ஹலோ சொல்வதற்கு முன் ,ஒரு பெண்குரல் ," டேய் எருமைமாடு .. என்னடா பண்ணிட்டு இருக்க .. உனக்காக எவ்ளோ நேரம்டா வெயிட் பண்றது " என்று கத்திகொண்டே இருந்தாள் மது ( நம்ம ஹீரோயின் தான் )..

"யார .. உன்னோட பொண்டாட்டி .. எரும .. ஒழுங்கா காமெடி பண்ணாம வந்து சேறு .. எனக்கு ஆபீஸ்க்கு நேரம் ஆச்சு " என்று மீண்டும் திட்டிவிட்டு அவனுக்கு பேச இடம் கொடுக்காமல் செய்தாள்..

அவனும் எரிச்சலுற்று , வெளியே செல்ல , காலைவைத்து அவனை விழுக்காட்ட , மது அவனை தாங்கி பிடித்தாள்..

இருவரது கண்ணும் ஒருவரை ஒருவர் பார்க்க , அவனது வெயிட் தாங்காமல் அவள் கீழேவிட , அவள்மீதே அவன் விழுந்தான் .. விழுகும்போதே சுதாரித்து தன்னுடைய வெயிட் முழுவதும் அவள் விழாமல் இருக்க தனது கைகளை ஊண்டி அவளை பார்த்தான் . அவளும் அவனை பார்க்க , ஒருவாறு சுதாரித்து இருவரும் விலகினார்கள். வந்த முதல்நாளே இப்படி என்று நினைத்துக்கொண்டு அவனது அறைக்கு செல்ல , அவளும் சிரித்துக்கொண்டே தனது வேலைகளை பார்க்க தொடங்கினாள். அங்கே இருந்த அனைவருக்கும் இவர்கள் ஏற்கனவே சந்தித்தவர்கள் என்று நினைத்து தங்களது வேலைகளை கவனிக்க தொடங்கினர்.

💕 நீயே என் இதயமடி 💕Where stories live. Discover now